POLLING FLAMES

 

தகாத முறையில் பெண்ணுக்கு மெசேஜ்... தர்ம அடி கொடுத்த உறவினர்கள்!

3 years ago 31 ஜனவரி 2023 04:18 PM | views : 240
ஆந்திராவின் அனக்காப்பள்ளி மாவட்டத்தில் இலவச வீட்டு மனைப் பட்டாவிற்கு விண்ணப்பித்த பெண்ணிற்கு, தகாத முறையில் வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பிய கிராம வருவாய் அதிகாரிக்கு, பெண்ணின் உறவினர்கள் தர்ம அடி கொடுத்தனர்.

ஜெகன் அண்ணா காலனி என்ற பெயரில் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இலவச வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பி.எல்.புரம் கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர் ஜெகன் அண்ணா காலனியில் இலவச வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்திருந்தார். அந்தப் பெண்ணிற்கு கிராம வருவாய் அதிகாரி பாஸ்கர் நாயுடு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

அதில் இலவச வீட்டு மனை தேவை என்றால் என்னுடன் ஒரு நாள் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் ஆவேசம் அடைந்த அந்த பெண், அவருடைய கணவர் மற்றும் உறவினர்கள், கிராம வருவாய் அதிகாரியின் அலுவலகத்திற்கு சென்று அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.

இதனையடுத்து அவர் தலைமறைவானார். இதுகுறித்து தகவல் அறிந்த அனக்காப்பள்ளி காவல்நிலைய போலீசார் கிராம வருவாய் அதிகாரியை கைது செய்வதற்காக தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் TTV DHINAKARAN TAMIL NADU AIADMK இந்திய அணி PMK ரஜினிகாந்த் காங்கிரஸ் பாமக UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் கனமழை கோவை CONGRESS முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM தமிழகம் அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION EDAPPADI PALANISWAMI திருமாவளவன் கொலை COIMBATORE KEERTHY SURESH AJITH பிரதமர் மோடி தேவர் சீமான் கைது TAMILAGA VETTRI KAZHAGAM அமமுக வன்னியர் OPS தமிழ்நாடு கொரோனா TAMIL ACTRESS THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL SURIYA நெல்லை NELLAI ஓபிஎஸ் சூர்யா தமிழக சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION மதுரை அஜித் கள்ளக்காதல் விடுமுறை RAJINIKANTH அன்புமணி திருப்பரங்குன்றம் தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை தீபாவளி தென்காசி CSK