POLLING FLAMES

 

10 ஆம் வகுப்பு மாணவி 8 மாதம் கர்ப்பம் : 9 ஆம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது!

3 years ago 17 டிசம்பர் 2022 01:55 PM | views : 252
அரியலூர்  10 ஆம் வகுப்பு மாணவியை 8 மாதம் கர்ப்பமாக்கிய 9 ஆம் வகுப்பு மாணவன் போக்சோவில் காவல்துறையினர் கைது  செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, பெற்றோர்கள் மாணவியை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர் மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி தெரிவித்துள்ளார். இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.



அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் மாணவனை கைது செய்து திருச்சி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர். மேலும், மாணவி அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU இந்திய அணி AIADMK ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் கனமழை காங்கிரஸ் PMK UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் பாமக PARLIAMENT ELECTION கோவை முக ஸ்டாலின் CONGRESS INDIAN CRICKET TEAM COIMBATORE தமிழகம் EDAPPADI PALANISWAMI கொலை திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் கைது தேவர் AJITH தமிழ்நாடு சீமான் வன்னியர் TAMILAGA VETTRI KAZHAGAM அமமுக OPS பிரதமர் மோடி KEERTHY SURESH THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS NELLAI சூர்யா ஓபிஎஸ் நெல்லை SURIYA கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் திருப்பரங்குன்றம் அன்புமணி ELECTION COMMISSION விடுமுறை வடகிழக்கு பருவமழை CSK தூத்துக்குடி கள்ளக்காதல் தீபாவளி கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை தென்காசி RAJINIKANTH மதுரை அஜித்