Tamil News & POLLING

 

ரெட் ஜெயின்ட் மூவிஸ் படங்களில் உதயநிதி வழங்கும் என்ற வாசகத்தை நீக்க உத்தரவு

3 years ago 17 டிசம்பர் 2022 10:57 AM | views : 161
ரெட் ஜெயின்ட் நிறுவனம் வெளியிடும் படங்களில் இனி உதயநிதி வழங்கும் என்ற வாசகத்தை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

உதயநிதி, கடந்த 2008-ம் ஆண்டு ரெட் ஜெயண்ட் மூவீஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன்மூலம் படங்களை தயாரிக்க தொடங்கினார். அந்த வகையில் அவர் தயாரித்த முதல் படம் குருவி. இதையடுத்து கமலின் மன்மதன் அம்பு, சூர்யா நடித்த ஆதவன் மற்றும் ஏழாம் அறிவு என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வந்தார் உதயநிதி.

இதையடுத்து கடந்த 2012-ம் ஆண்டு ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படம் வெற்றியடைந்த பின் நடிப்பில் கவனம் செலுத்திய உதயநிதி, படங்கள் தயாரிப்பதை குறைத்துக் கொண்டார்.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பை தாண்டி தயாரிப்பு மற்றும் சினிமா விநியோகம் ஆகியவற்றிலும் ஈடுபட்டு வந்தார்.  அவரின் ரெட் ஜெயின்ட் நிறுவன மூலம் பல திரைப்படங்களை தமிழகத்தில் வெளியிட்டு வருகிறார்.


இதுவரை ரெட் ஜெயின்ட் நிறுவனம் வெளியிடும் படங்களில் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும்.  ஆனால் தற்போது உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்று இருப்பதால், ரெட் ஜெயின்ட் நிறுவனம் வெளியிடும் படங்களின் போஸ்டர் மற்றும் விளம்பரங்களில் ரெட் ஜெயன் மூவிஸ் என்பது மட்டும் பதிவிட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் என்ற வாசகம் நீக்கப்படுகிறது.  இனிவரும் காலங்களில் ரெட் ஜெயன் மூவிஸ் என்ற பெயர் மட்டுமே அந்நிறுவனம் வெளியிடும் படங்களின் விளம்பரங்களில் இடம்பெறும். இது சமீபத்தில் உருவாகியுள்ள செம்பி மற்றும் வாரிசு படங்களின் விளம்பரங்களில் இருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் TAMIL NADU டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி ADMK AIADMK மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS INDIAN CRICKET TEAM இந்திய அணி முக ஸ்டாலின் ரஜினிகாந்த் CONGRESS PMK சீமான் கனமழை UDHAYANIDHI STALIN தமிழகம் பாமக அன்புமணி ராமதாஸ் கைது பிரதமர் மோடி PARLIAMENT ELECTION SEEMAN கோவை KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை COIMBATORE சட்டசபை தேர்தல் EDAPPADI PALANISWAMI தீபாவளி அமமுக கொலை NELLAI மதுரை நெல்லை TAMIL ACTRESS TAMILAGA VETTRI KAZHAGAM திருநெல்வேலி THIRUMAVALAVAN தென்காசி ஓபிஎஸ் தமிழ்நாடு THOOTHUKUDI AJITH திருமாவளவன் விடுமுறை கள்ளக்காதல் NORTHEAST MONSOON அஜித் நயினார் நாகேந்திரன் பாலியல் தொல்லை OPS 2024 T20 WORLDCUP தேவர் கொரோனா வன்னியர் டிரெண்டிங் SENGOTTAIYAN MADURAI திருப்பரங்குன்றம் டாப் நியூஸ் ASSEMBLY ELECTIONS ELECTION COMMISSION வானிலை ஆய்வு மையம் தமிழக அரசு கீர்த்தி சுரேஷ்