Tamil News & POLLING

 

பாலியல் தொல்லைக்கு பயந்து சிறுமி தற்கொலை முயற்சி - வாலிபர் மீது வழக்குப்பதிவு

4 months ago 19 நவம்பர் 2025 04:32 PM | views : 170
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சங்கிலிகருப்பு (24 வயது). இவர் ஒரு வீட்டில் 15 வயது சிறுமி தனியாக இருந்ததை அறிந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். இதனால் பயந்து போன அந்த சிறுமி, வீட்டுக்கதவை பூட்டிக்கொண்டார். பின்னர் ஜன்னல் வழியாக அந்த சிறுமிக்கு ஆபாச சைகை காண்பித்ததோடு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதோடு கதவு மீது கல் எறிந்து சங்கிலிகருப்பு சத்தம் போட்டுள்ளார்.

இதனால் பயந்துபோன அந்த சிறுமி வீட்டிற்குள் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கு வந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று சிறுமியை மீட்டனர். சிறுமியின் கழுத்தில் தூக்குப்போட்டதற்கான காயம் இருந்தது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து சிறுமியின் தந்தை சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ வழக்குப்பதிவு செய்து சங்கிலிகருப்புவை தேடி வருகிறார்கள்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI ADMK AMMK AIADMK எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TAMIL NADU TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் ANBUMANI RAMADOSS தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் PMK இந்திய அணி தமிழகம் கனமழை UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM CONGRESS ரஜினிகாந்த் சீமான் பாமக PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி COIMBATORE வடகிழக்கு பருவமழை EDAPPADI PALANISWAMI கோவை கைது அமமுக தீபாவளி NELLAI கொலை சட்டசபை தேர்தல் KEERTHY SURESH AJITH TAMIL ACTRESS தமிழ்நாடு நெல்லை தென்காசி THIRUMAVALAVAN திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM கள்ளக்காதல் திருநெல்வேலி மதுரை OPS SEEMAN SENGOTTAIYAN THOOTHUKUDI டிரெண்டிங் டாப் நியூஸ் நடிகை ஓபிஎஸ் திருப்பரங்குன்றம் கொரோனா தேவர் கீர்த்தி சுரேஷ் வன்னியர் 2024 T20 WORLDCUP விடுமுறை வானிலை ஆய்வு மையம் MADURAI தமிழக அரசு NORTHEAST MONSOON அஜித் ELECTION COMMISSION ASSEMBLY ELECTIONS TAMIL CINEMA