Tamil News & polling
டெல்லியில் ஆசிரியை ஒருவர் 5ஆம் வகுப்பு மாணவியை முதல் மாடியில் இருந்து கீழே வீசி எறிந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
டெல்லி நகர் நிகாம் பகுதியில் பிராத்மிக் வித்யாலயா என்ற பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சமூக அறிவியல் பாட ஆசிரியையாக இருப்பவர் கீதா தேஷ்வால். இவர் நேற்று அப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்க வகுப்பறைக்கு சென்றுள்ளார். காலை 11 மணி அளவில் ஆசிரியை கீதா பாடம் எடுத்துக்கொண்டிருந்த நிலையில், அந்த வகுப்பில் படிக்கும் மாணவி வந்தனா என்ற சிறுமியின் மீது ஆசிரியை ஆத்திரம் கொண்டுள்ளார்.
வந்தனா வகுப்பை சரியாக கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மாணவியை ஆசிரியை கீதா கடுமையாக அடித்து தாக்கியுள்ளார். அத்துடன், கத்திரிகோலை வைத்து மாணவியின் தலைமுடியை வெட்டியும், உடலில் தாக்கியும் காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.
அத்தோடு நிற்காமல் அந்த மாணவியை அவர் படிக்கும் 5 ஆம் வகுப்பறை முதல் மாடி ஜன்னலில் இருந்து கீழே வீசி தள்ளியுள்ளார். இந்த கொலை வெறி தாக்குதலில் மாணவி படுகாயம் அடைந்த நிலையில், கீழே விழுந்த மாணவியை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட ஆசிரியை கீதாவை அப்பகுதியினர் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அவரை கைது செய்த காவல்துறை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது. அவர் மீது 307 ஆவது பிரிவின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் டிசிபி ஸ்வேதா சவுஹான் கூறியுள்ளார். மேலும், மாணவியின் சிகிச்சை செலவை ஏற்பதாக டெல்லி கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. மேலும், சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை கேட்டு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP தமிழக வெற்றிக் கழகம் Tamil Nadu TTV Dhinakaran MK Stalin எடப்பாடி பழனிசாமி ADMK திருமாவளவன் AIADMK மு.க.ஸ்டாலின் AMMK தமிழ்நாடு Thirumavalavan அன்புமணி ராமதாஸ் டிடிவி தினகரன் செங்கோட்டையன் Anbumani Ramadoss சீமான் முக ஸ்டாலின் Sengottaiyan PMK Seeman வடகிழக்கு பருவமழை Edappadi Palaniswami Tamilaga Vettri Kazhagam பாமக சட்டசபை தேர்தல் Congress