POLLING FLAMES

 

எடப்பாடி கைவிட்டு போகும் அதிமுக! ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருவதாக தகவல் !

3 years ago 14 ஆகஸ்ட் 2022 03:44 PM | views : 251
அதிமுக கையை விட்டு போகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் எடப்பாடி பழனிச்சாமி நெருக்கமான ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றம் நிகழ்ந்தது. இறுதியாக பாஜக தலையீட்டால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வசம் அதிமுக வந்தது.


ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவை வழி நடத்தி வந்தனர். இதற்கிடையே இவர்கள் இருவரும் தங்களுக்குள் பனிப்போர் நடத்தி வந்ததாகவும் சொல்லப்பட்டது.

இதன் எதிரொலியாக தன்னுடன் சேர்ந்து பயணித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு அல்வா கொடுக்க முடிவு செய்த எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக முன்னணி நிர்வாகிகள் பலரையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டார்.


இவர்களின் துணையுடன் ஒற்றை தலைமை விவகாரத்தை கையில் எடுத்ததோடு நிற்காமல், பொதுக்குழுவை கூட்டி இடைக்கால பொதுச்செயலாளர் பதவியையும் எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றினார்.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கி, எடப்பாடி பழனிச்சாமி அதிரடி காட்டினார். இதனால் ஆத்திரமடைந்த ஓபிஎஸ் அதிமுகவுக்கு உரிமை கோரி சட்டப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.


அதேசமயம் தனக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்து விளக்கி கூறவும், மீண்டும் இறங்கி நியாயம் பெற்று தரவும் கோரி பாஜக மேலிடத்தின் கதவை ஓபிஎஸ் தட்டி இருக்கிறார்.

இதை சீரியசாகவே எடுத்துக்கொண்ட பாஜக மேலிடம் எடப்பாடியிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது‘நீங்கள் என்ன சொல்றது.. நான் என்ன கேட்கிறது. கட்சி என் பின்னால் இருக்கிறது. பெருவாரியான பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் என் பின்னால் உள்ளார்கள்’ என்று, சற்று கூலாக கூறி உள்ளார்.


இந்த உத்தரவை தடாலடியாக நிராகரித்த எடப்பாடி பழனிச்சாமி, ‘இனி பாஜகவின் பஞ்சாயத்தில் கலந்து கொள்ள போவதில்லை’ என்று தெரிவித்து அதிரடியை அரங்கேற்றி உள்ளார்.

இதனால் டென்ஷன் ஆன பாஜக மேலிடம் சட்டத்மன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என எதிலும் எடப்பாடி கை ஓங்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி, ‘கட்சியை ஓபிஎஸ், சசிகலா வசம் ஒப்படைத்துவிட்டு ஆதரவாளர்களுடன் வெளியேறுங்கள்’ என்று மறைமுகமாக உத்தரவு போட்டு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரம் காதை கடிக்கிறது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU இந்திய அணி AIADMK தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை காங்கிரஸ் PMK பாமக தமிழகம் அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் CONGRESS INDIAN CRICKET TEAM கோவை PARLIAMENT ELECTION கொலை COIMBATORE திருமாவளவன் EDAPPADI PALANISWAMI OPS தேவர் பிரதமர் மோடி சீமான் அமமுக தமிழ்நாடு கைது KEERTHY SURESH AJITH வன்னியர் TAMILAGA VETTRI KAZHAGAM BIGG BOSS TAMIL சூர்யா TAMIL ACTRESS SURIYA தமிழக சட்டசபை தேர்தல் கொரோனா NELLAI THIRUMAVALAVAN ஓபிஎஸ் நெல்லை சட்டசபை தேர்தல் தென்காசி மதுரை திருப்பரங்குன்றம் CSK ELECTION COMMISSION பாலியல் தொல்லை RAJINIKANTH தீபாவளி கீர்த்தி சுரேஷ் அன்புமணி வடகிழக்கு பருவமழை விடுமுறை கள்ளக்காதல் தூத்துக்குடி அஜித்