POLLING FLAMES

 

திசையன்விளையில் திமுகவிடம் விலைபோன அதிமுக கவுன்சிலர்! குலுக்கல் முறையில் வென்ற அதிமுக ஜான்சி ராணி!

4 years ago 04 மார்ச் 2022 08:47 AM | views : 256
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் மட்டும் திமுகவுக்கு சறுக்கல் ஏற்பட்டது. மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் அதிமுக 9, திமுக, காங்கிரஸ் தலா 2, பாஜக, தேமுதிக தலா ஒன்று, சுயேச்சைகள் 3 இடங்களிலும் வென்றனர்.

மேலும் பேரூராட்சி கவுன்சிலர்களாக ஜான்சிராணி, ஜெயக்குமார், ஆறுமுக தேவி, பிரதீஷ் குமார், உமா, சண்முகவேல், முத்துக்குமார், பிரேம்குமார், தனசீலன் ஈஸ்வரி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாதுகாப்பு கோரி வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு 9 பேருக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இதற்கிடையே திமுக சார்பில் சுபினா என்பவரை பேரூராட்சி தலைவராக திமுக அறிவித்தது. இன்று காலை திசையன்விளை பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் தேர்வுக்கான தேர்தல் நடந்தது. ஆனால் திமுகவின் சுபினாவுக்கு திமுக சார்பில் ஆதரவு தெரிவிக்கவில்லை. இவருக்கு யாரும் முன்மொழியவில்லை. கமலா நேரு என்பவர் திமுக கூட்டணி சார்பில் கமலா நேரு என்பவர் தலைவராக்க முன்மொழிந்தனர்.

அதிமுக சார்பில் 3வது வார்டு கவுன்சிலர் ஜான்சிராணி தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதிமுக, திமுக சார்பில் போட்டியிட்ட இருவரும் தலா 9 ஓட்டுகள் பெற்றனர். இதனால் குலுக்கல் முறையில் தலைவர் தேர்வு செய்யப்பட்டது. இதில் அதிமுகவின் 3வது வார்டு கவுன்சிலர் ஜான்சிராணி வெற்றி பெற்று பேரூராட்சி தலைவரானார்.

இந்த மறைமுக தேர்தலின்போது பாஜக கவுன்சிலர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் ஒரு அதிமுக கவுன்சிலர் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் தான் தலைவர் வேட்பாளர்கள் 9 ஓட்டுகள் பெற்றனர். இல்லாவிட்டால் எளிமையாக அதிமுக வெற்றி பெற்றிருக்கும். குலுக்கல் முறையில்தேர்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK AMMK ADMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU இந்திய அணி ANBUMANI RAMADOSS AIADMK ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் கனமழை PMK காங்கிரஸ் பாமக CONGRESS கோவை PARLIAMENT ELECTION INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் திருமாவளவன் COIMBATORE கொலை அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI தமிழகம் TAMILAGA VETTRI KAZHAGAM அமமுக வன்னியர் KEERTHY SURESH தமிழ்நாடு OPS சீமான் பிரதமர் மோடி தேவர் கைது AJITH SURIYA நெல்லை தீபாவளி தமிழக சட்டசபை தேர்தல் சூர்யா BIGG BOSS TAMIL TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN ஓபிஎஸ் NELLAI கொரோனா விடுமுறை திருப்பரங்குன்றம் CSK பாலியல் தொல்லை RAJINIKANTH வடகிழக்கு பருவமழை தென்காசி அஜித் அன்புமணி ELECTION COMMISSION தூத்துக்குடி கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் மதுரை