POLLING FLAMES

 

திமுகவை பாராட்டி தள்ளிய மருத்துவர் ராமதாஸ்!

4 years ago 13 அக்டோபர் 2021 09:52 AM | views : 259
தமிழக அரசும், மருத்துவத் துறையினரும் மேற்கொண்ட நடவடிக்கைகள், அதிக அளவில் போடப்பட்ட தடுப்பூசிகள் தான் இதற்கு காரணம். முகக்கவசம் அணிந்து இதற்கு ஒத்துழைத்த மக்களும் இதற்கு காரணம். இவர்கள் பாராட்டத்தக்கவர்கள். அனைவரின் பணியும், ஒத்துழைப்பும் தொடர வேண்டும்.

17-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது நிச்சயமாக நிம்மதியளிக்கும் செய்தியாகும் என கூறி தமிழக அரசுக்கு ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் 31,000-ஐ கடந்து சென்றது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைகள் தட்டுப்பாடு என நோயாளிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இதனையடுத்து, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது.


இதனால், கொரோனா பாதிப்பு பெரமளவு குறைக்கப்பட்டு பொது போக்குவரத்து, பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், கொரோனாவை தடுக்கும் பேராயுதமான தடுப்பூசி போடும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. வாரம்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் தற்போது கொரோனா 2,000-க்கும் கீழ் குறைந்து விட்டது. இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்திய தமிழக அரசுக்கு ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 1300க்கும் கீழாக 1289 என்ற அளவுக்கு குறைந்திருக்கிறது. சென்னையில் 164 ஆக குறைந்திருக்கிறது. தொடர்ந்து 17-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது நிச்சயமாக நிம்மதியளிக்கும் செய்தியாகும்.


தமிழக அரசும், மருத்துவத் துறையினரும் மேற்கொண்ட நடவடிக்கைகள், அதிக அளவில் போடப்பட்ட தடுப்பூசிகள் தான் இதற்கு காரணம். முகக்கவசம் அணிந்து இதற்கு ஒத்துழைத்த மக்களும் இதற்கு காரணம். இவர்கள் பாராட்டத்தக்கவர்கள். அனைவரின் பணியும், ஒத்துழைப்பும் தொடர வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் MK STALIN பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் இந்திய அணி TAMIL NADU AIADMK ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் பாமக UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கனமழை PMK CONGRESS கோவை INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் கொலை EDAPPADI PALANISWAMI தமிழகம் COIMBATORE திருமாவளவன் பிரதமர் மோடி KEERTHY SURESH தேவர் வன்னியர் தமிழ்நாடு AJITH சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM OPS அமமுக கைது ஓபிஎஸ் BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் சூர்யா SURIYA TAMIL ACTRESS THIRUMAVALAVAN நெல்லை கொரோனா NELLAI தமிழக சட்டசபை தேர்தல் விடுமுறை தீபாவளி பாலியல் தொல்லை மதுரை ELECTION COMMISSION அஜித் திருப்பரங்குன்றம் தென்காசி கீர்த்தி சுரேஷ் CSK அன்புமணி தூத்துக்குடி கள்ளக்காதல் RAJINIKANTH வடகிழக்கு பருவமழை