POLLING FLAMES

 

22 வயது பொறியியல் கல்லூரி மாணவி ஊராட்சி தலைவராக வெற்றி பெற்று சாதனை

4 years ago 13 அக்டோபர் 2021 09:11 AM | views : 248
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு 22 வயதுடைய பொறியியல் கல்லூரி மாணவி போட்டியிட்டு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.தென்காசி மாவட்டமாக கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர்.


இவர்களில் வெங்காடம்பட்டி ஊராட்சி லெட்சுமியூர் பகுதியைச் சேர்ந்த ர.ஸாருகலா (வயது 22) 3,336 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ரேவதி முத்து வடிவு என்பவரை விட 796 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும், இதே ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மற்ற மூன்று பேர்களும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றுள்ள ஸாருகலா கோவை நேஷனல் கல்லூரியில் இளங்கலை பொறியியல் படித்து இந்த ஆண்டு முதுகலை பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரது தந்தை ரவி சுப்பிரமணியன் சொந்தமாக செங்கல் சூளை மற்றும் விவசாயம் செய்து வருகிறார்.இவரது தாய் சாந்தி பூலாங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 19 வயதில் சந்துரு என்ற தம்பி உள்ளார். தமிழகத்தில் மிகவும் குறைந்த வயதில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்தலில் போட்டியிட்டு வெற்றியுள்ள ஸாருகலாவிற்கு வெங்காடம்பட்டி ஊராட்சி பகுதியைச் சார்ந்த அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து உள்ளனர். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி AIADMK ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் கனமழை PMK பாமக காங்கிரஸ் தமிழகம் முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION CONGRESS INDIAN CRICKET TEAM அன்புமணி ராமதாஸ் கோவை கொலை திருமாவளவன் COIMBATORE EDAPPADI PALANISWAMI அமமுக OPS சீமான் வன்னியர் TAMILAGA VETTRI KAZHAGAM KEERTHY SURESH தமிழ்நாடு பிரதமர் மோடி தேவர் AJITH கைது SURIYA NELLAI நெல்லை THIRUMAVALAVAN ஓபிஎஸ் சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL TAMIL ACTRESS சூர்யா கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION RAJINIKANTH தீபாவளி பாலியல் தொல்லை அன்புமணி கள்ளக்காதல் தென்காசி CSK வடகிழக்கு பருவமழை அஜித் மதுரை திருப்பரங்குன்றம் விடுமுறை தூத்துக்குடி