Tamil News & POLLING

 

தை மாதத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்த அறிவிப்பு - டிடிவி தினகரன் தகவல்

2 months ago 26 டிசம்பர் 2025 11:32 PM | views : 250
மதுரை,

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக எத்தனை தொகுதிகள் என்று முடிவாகிவிட்டதா? தமிழ்நாட்டில் உள்ள கூட்டணி கட்சிகளும், கூட்டணியை உருவாக்க முயற்சிக்கும் கட்சிகளும் எங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது உண்மை.

நண்பர் அண்ணாமலை எங்களை அலைபேசியிலும், நேரிலும் சந்திக்கும் போதெல்லாம் என்.டி.ஏ. கூட்டணியில் வர வேண்டும் என்றுதான் சொல்கிறார். ஆனால், அதுகுறித்து நாங்கள் இன்னும் முடிவு எடுக்கவில்லை. கூட்டணிக்காக என்னிடம் பேசுவார்களே தவிர, நான் யாரையும் நேரில் சந்திக்கவில்லை.

ஆண்டிப்பட்டி தொகுதியை நமக்கு அளித்தால் மட்டுமே கூட்டணி. இல்லை என்றால் தனியாக கூட ஆண்டிப்பட்டி தொகுதியில் நிற்போம். பூத் கமிட்டி வேலைகளை முறையாக பாருங்கள். ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தால் நானே அறிவிப்பேன்.

எங்களின் தகுதியான வேட்பாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கின்ற கூட்டணிக்குத்தான் நாங்கள் செல்ல இருக்கின்றோம். தை மாதத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI ADMK AMMK AIADMK எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் PMK இந்திய அணி தமிழகம் கனமழை UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM CONGRESS ரஜினிகாந்த் சீமான் பாமக பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION COIMBATORE வடகிழக்கு பருவமழை EDAPPADI PALANISWAMI கோவை கைது அமமுக தீபாவளி NELLAI சட்டசபை தேர்தல் கொலை KEERTHY SURESH நெல்லை SEEMAN OPS மதுரை TAMILAGA VETTRI KAZHAGAM திருமாவளவன் THIRUMAVALAVAN தென்காசி கள்ளக்காதல் திருநெல்வேலி TAMIL ACTRESS தமிழ்நாடு AJITH NORTHEAST MONSOON வானிலை ஆய்வு மையம் SENGOTTAIYAN நடிகை டிரெண்டிங் தமிழக அரசு ஓபிஎஸ் கீர்த்தி சுரேஷ் கொரோனா திருப்பரங்குன்றம் டாப் நியூஸ் அஜித் 2024 T20 WORLDCUP ELECTION COMMISSION விடுமுறை MADURAI வன்னியர் ASSEMBLY ELECTIONS THOOTHUKUDI TAMIL CINEMA தேவர்