Tamil News & POLLING

 

தி.மு.க. தேர்தல் அறிக்கை மக்களின் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும்- கனிமொழி எம்.பி.

2 months ago 23 டிசம்பர் 2025 05:39 AM | views : 204
கோவை:

மேற்கு மண்டல தி.மு.க. மகளிர் அணி மாநாடு வருகிற 29-ந்தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடக்கிறது. மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் போது, தேர்தல் அறிக்கை குழு கோவையில் இருக்கும் நிர்வாகிகளிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும். தொழில் துறை, விவசாயிகள் என அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்கப்படும். தி.மு.க. தயாரிக்கும் தேர்தல் அறிக்கை, மக்களுடைய தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பை சொல்வதாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்.

இங்கிருக்கும் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கருத்துகள் கேட்கப்படும்.

மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டு தெரிந்து கொண்டு, எதையெல்லாம் செய்ய முடியுமோ, அதை வாக்குறுதியாக கொடுப்போம். அதில் எண்ணிக்கை என்று எதுவும் கணக்கு இல்லை.

அரசியல் காரணங்களுக்காக தேர்தல் நேரத்தில் பல விமர்சனங்களை சில பேர் வைப்பார்கள். அதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. யாருக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்பது தேர்தல் முடிந்த பிறகு மிகத் தெளிவாக தெரியும். நாங்கள் நிச்சயமாக உறுதியாக இருக்கிறோம். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடரும். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக தொடர்வார் என்றார்.

முன்னதாக கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கனிமொழி எம்.பி.க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் அ.ரவி, தளபதி முருகேசன், துரை செந்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை தவெக TVK ANNAMALAI AMMK ADMK எடப்பாடி பழனிசாமி AIADMK டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN TAMIL NADU MK STALIN காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் PMK UDHAYANIDHI STALIN கனமழை இந்திய அணி INDIAN CRICKET TEAM தமிழகம் ரஜினிகாந்த் சீமான் பாமக CONGRESS பிரதமர் மோடி PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் சட்டசபை தேர்தல் KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI COIMBATORE கோவை NELLAI தீபாவளி அமமுக வடகிழக்கு பருவமழை கைது கொலை TAMILAGA VETTRI KAZHAGAM மதுரை தமிழ்நாடு TAMIL ACTRESS தென்காசி கள்ளக்காதல் OPS திருமாவளவன் SEEMAN THIRUMAVALAVAN திருநெல்வேலி நெல்லை AJITH கீர்த்தி சுரேஷ் விடுமுறை தமிழக அரசு SENGOTTAIYAN திருப்பரங்குன்றம் 2024 T20 WORLDCUP THOOTHUKUDI கொரோனா ஓபிஎஸ் ASSEMBLY ELECTIONS TAMIL CINEMA MADURAI வன்னியர் தேவர் வானிலை ஆய்வு மையம் அஜித் டிரெண்டிங் டாப் நியூஸ் NORTHEAST MONSOON நடிகை ELECTION COMMISSION