POLLING FLAMES

 

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது

1 year ago 10 டிசம்பர் 2024 01:09 PM | views : 224
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது,

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கை – தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும். காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 4 நாட்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். நாளை மறுநாள் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.

குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரை பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்.

சில நேரங்களில் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். என தெரிவித்தார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU டிடிவி தினகரன் AIADMK இந்திய அணி காங்கிரஸ் ரஜினிகாந்த் PMK UDHAYANIDHI STALIN பாமக கனமழை தமிழக வெற்றிக் கழகம் CONGRESS கோவை INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION தமிழகம் அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் திருமாவளவன் COIMBATORE EDAPPADI PALANISWAMI கொலை KEERTHY SURESH AJITH சீமான் வன்னியர் தேவர் கைது OPS பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM அமமுக தமிழ்நாடு நெல்லை NELLAI சட்டசபை தேர்தல் தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL சூர்யா ஓபிஎஸ் TAMIL ACTRESS THIRUMAVALAVAN SURIYA கொரோனா அஜித் ELECTION COMMISSION மதுரை திருப்பரங்குன்றம் கள்ளக்காதல் விடுமுறை தூத்துக்குடி அன்புமணி RAJINIKANTH பாலியல் தொல்லை தீபாவளி CSK கீர்த்தி சுரேஷ் தென்காசி வடகிழக்கு பருவமழை