POLLING 📊 TN ELECTION 2026

 

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு..!

1 month ago 12 பிப்ரவரி 2026 10:02 AM | views : 374
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் 15 ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும்.

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

12-02-2026: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

13-02-2026: தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

14-02-2026: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

15-02-2026 மற்றும் 16-02-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

17-02-2026 மற்றும் 18-02-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசான மழை பெய்யக்கூடும்.

பனிமூட்டம் பற்றிய முன்னறிவிப்பு:

ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், நீலகிரி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 13 ஆம் தேதி அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், நீலகிரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 14 ஆம் தேதி அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், நீலகிரி, காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் 15 ஆம் தேதி அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், நீலகிரி, காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 16 ஆம் தேதி அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் 16 ஆம் தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்

காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர், நாமக்கல், ஈரோடு, தென்காசி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 17 ஆம் தேதி அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 17 ஆம் தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (12-02-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (13-02-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்கடல் பகுதிகள்:

12-02-2026 மற்றும் 13-02-2026: தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

14-02-2026: தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள், அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

15-02-2026: தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

16-02-2026: தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழக கடலோரப்பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகள்:

12-02-2026 முதல் 16-02-2026 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை BJP பாஜக CHENNAI அண்ணாமலை TVK தவெக AMMK ADMK ANNAMALAI MK STALIN TAMIL NADU எடப்பாடி பழனிசாமி AIADMK ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் PMK பாமக முக ஸ்டாலின் கனமழை அன்புமணி ராமதாஸ் தமிழகம் காங்கிரஸ் சட்டசபை தேர்தல் CONGRESS ரஜினிகாந்த் கைது தமிழ்நாடு கொலை UDHAYANIDHI STALIN PARLIAMENT ELECTION திருமாவளவன் கோவை சீமான் தீபாவளி EDAPPADI PALANISWAMI INDIAN CRICKET TEAM AJITH அமமுக COIMBATORE KEERTHY SURESH பிரதமர் மோடி தென்காசி இந்திய அணி TAMIL ACTRESS வடகிழக்கு பருவமழை OPS நெல்லை THIRUMAVALAVAN NELLAI ASSEMBLY ELECTIONS TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் கீர்த்தி சுரேஷ் PRIME MINISTER MODI மதுரை ஓபிஎஸ் SEEMAN வன்னியர் திருப்பரங்குன்றம் தமிழக சட்டசபை தேர்தல் கொரோனா பாலியல் தொல்லை தூத்துக்குடி CSK ELECTION COMMISSION கள்ளக்காதல் அஜித் நடிகை