POLLING FLAMES

 

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கம்

4 months ago 22 டிசம்பர் 2025 02:49 AM | views : 321
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சென்னை சென்டிரல் - மங்களூரு, ஈரோடு - நாகர்கோவில், செந்திராபாத் - வேளாங்கண்ணி, பெங்களூரு - கொல்லம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

கர்நாடக மாநிலம் மங்களூரு ஜங்சனில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 30-ந்தேதி காலை 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06126), அதேநாள் இரவு 11.30 மணிக்கு சென்னை சென்டிரல் சென்றடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் காலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06125), அதேநாள் இரவு 11.30 மணிக்கு மங்களூரு ஜங்சன் சென்றடையும்.

ஈரோட்டில் இருந்து நாளை மற்றும் 30-ந்தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06025), மறுநாள் மதியம் 1.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து வருகிற 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும் சிறப்பு ரெயில் (06026), மறுநாள் இரவு 8.30 மணிக்கு ஈரோடு சென்றடையும்.

அதேபோல, தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து நாளை இரவு 7.25 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணி செல்லும் சிறப்பு ரெயில் (07407), மறுநாள் மாலை 5.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமார்க்கமாக, வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 25-ந்தேதி காலை 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07408), மறுநாள் காலை 6.10 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

மேலும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து வருகிற 25-ந்தேதி மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06573) மறுநாள் காலை 6.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து 26-ந்தேதி காலை 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06574) மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் இந்திய அணி AIADMK ரஜினிகாந்த் காங்கிரஸ் PMK UDHAYANIDHI STALIN கனமழை பாமக தமிழக வெற்றிக் கழகம் தமிழகம் கோவை CONGRESS INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் EDAPPADI PALANISWAMI திருமாவளவன் கொலை COIMBATORE தமிழ்நாடு தேவர் சீமான் KEERTHY SURESH கைது அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி AJITH OPS வன்னியர் கொரோனா சட்டசபை தேர்தல் நெல்லை BIGG BOSS TAMIL THIRUMAVALAVAN NELLAI TAMIL ACTRESS SURIYA ஓபிஎஸ் சூர்யா தமிழக சட்டசபை தேர்தல் தீபாவளி ELECTION COMMISSION தென்காசி CSK பாலியல் தொல்லை கீர்த்தி சுரேஷ் RAJINIKANTH மதுரை தூத்துக்குடி விடுமுறை வடகிழக்கு பருவமழை அன்புமணி திருப்பரங்குன்றம் கள்ளக்காதல் அஜித்