தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திர வெயில் எனப்படும் கத்திரி வெயில் வரும் 4 ஆம் தேதி முதல்தான் தொடங்குகிறது. ஆனால் அதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக வேலூரில் 107° F வெயில் பதிவாகியுள்ளது. ஈரோடு, கரூர், மதுரை, திருச்சி, நாமக்கல், தருமபுரி, திருப்பத்தூர், திருத்தணி, கோவை, சேலம், பாளையங்கோட்டை, மீனம்பாக்கம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் 100° ஃபாரன்ஹீட்டிற்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 29 ஆம் தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள« முந்தைய செய்தி (Previous)
மனைவி குடும்பம் நடத்த வர மறுப்பு: வாலிபர் எடுத்த விபரீத...அடுத்த செய்தி (Next) »
ஊட்டியில் தாயை பிரிந்து தவித்த புலி குட்டி மீட்பு -...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: