Tamil News & POLLING

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்- திருமாவளவன்

1 year ago 09 டிசம்பர் 2024 07:34 AM | views : 153
சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. திமுகவை கடுமையாக விமர்சித்து ஆதவ் அர்ஜுனா பேசிய நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என திருமாவளவன் கூறியிருந்தார். இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆதவ் அர்ஜுனா அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரியவந்தது. இது குறித்து நேற்று முன் தினம் கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.

கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும் அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால், கட்சியின் நலன்கள் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும், அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு "தவறான முன்மாதிரியாக" அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது

இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜுனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீரமானிக்கப்பட்டது. அதன்படி, ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை தவெக TVK ANNAMALAI ADMK AMMK AIADMK TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் TAMIL NADU MK STALIN பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் காங்கிரஸ் கனமழை தமிழகம் இந்திய அணி INDIAN CRICKET TEAM PMK UDHAYANIDHI STALIN பாமக சீமான் ரஜினிகாந்த் பிரதமர் மோடி CONGRESS அன்புமணி ராமதாஸ் கோவை EDAPPADI PALANISWAMI தீபாவளி அமமுக சட்டசபை தேர்தல் COIMBATORE KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை PARLIAMENT ELECTION NELLAI கொலை கைது தென்காசி தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM AJITH விடுமுறை SEEMAN TAMIL ACTRESS OPS திருநெல்வேலி நெல்லை THIRUMAVALAVAN கள்ளக்காதல் மதுரை திருமாவளவன் THOOTHUKUDI TAMIL CINEMA டிரெண்டிங் அஜித் MADURAI டாப் நியூஸ் திருப்பரங்குன்றம் வன்னியர் 2024 T20 WORLDCUP கொரோனா SENGOTTAIYAN ஓபிஎஸ் கீர்த்தி சுரேஷ் ASSEMBLY ELECTIONS NORTHEAST MONSOON தேவர் வானிலை ஆய்வு மையம் தமிழக அரசு நடிகை ELECTION COMMISSION