POLLING FLAMES

 

ரஜினிகாந்த் பற்றி அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனாவுக்கு கண்டனம்..!

1 month ago 16 மார்ச் 2026 01:21 PM | views : 308
சென்னை

நடிகர் ரஜினிகாந்த் பற்றி அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனாவுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என மத்திய இணை மந்திரி எல். முருகன் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜாதி, மதம், மொழியை கடந்து தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் அறிந்த நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். அனைத்த தரப்பு மக்கள் மீது தீராத அன்பு கொண்ட அவர், தவறை சுட்டிக்காட்ட என்றுமே தயங்கியதில்லை. தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பதும், மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை பயமின்றி எதிர்த்து நிற்பதையும் வழக்கமாக கொண்டவர்.


அரசியலுக்கு வந்து அவர் மக்கள் தொண்டாற்ற வேண்டும் என அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று ரஜினிகாந்த, அரசியல் பாதையில் பயணம் செய்ய முடிவு செய்து பிறகு உடல்நல பிரச்சனையால் முடிவை கைவிட்டார்.

அவரை பற்றியும் அவரது அரசியல் பயண முடிவு குறித்தும் த.வெ.க. மூத்த நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா வாய்க்கு வந்தபடி பேசுவது கடும் கண்டனத்துக்குரியது. சொந்த அரசியலுக்காக தமிழக மக்களின் மனங்களை கொள்ளை கொண்ட மாபெரும் நடிகர் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆதவ் அர்ஜுனாவுக்கு எனது கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்.

ரஜினிகாந்திடம் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK MK STALIN எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் TAMIL NADU டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் PMK AIADMK தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் ரஜினிகாந்த் பாமக முக ஸ்டாலின் கனமழை UDHAYANIDHI STALIN தமிழகம் CONGRESS PARLIAMENT ELECTION இந்திய அணி கோவை திருமாவளவன் கொலை EDAPPADI PALANISWAMI COIMBATORE அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு KEERTHY SURESH சீமான் AJITH அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM OPS INDIAN CRICKET TEAM பிரதமர் மோடி கைது தமிழக சட்டசபை தேர்தல் கொரோனா THIRUMAVALAVAN TAMIL ACTRESS ஓபிஎஸ் சட்டசபை தேர்தல் NELLAI நெல்லை BIGG BOSS TAMIL அஜித் விடுமுறை வடகிழக்கு பருவமழை சூர்யா கீர்த்தி சுரேஷ் மதுரை ELECTION COMMISSION RAJINIKANTH CSK தேவர் கள்ளக்காதல் தூத்துக்குடி திருப்பரங்குன்றம் தென்காசி தீபாவளி வன்னியர் SURIYA