Tamil News & POLLING

 

செப்டம்பர் 23-ந் தேதி திட்டமிட்டபடியே த.வெ.க மாநாடு! ஃபுல் ஸ்டாப் வைத்த புஸ்ஸி ஆனந்த்...

1 year ago 03 செப்டம்பர் 2024 02:28 AM | views : 150
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியதோடு, தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.அதன்படி அண்மையில் பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது.


அதேபோல் கட்சிக்கான பாடலும் வெளியிடப்பட்டிருந்தது.கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடைபெற இருக்கும் மாநாட்டில் தெரிவிப்போம் அதுவரை கட்சியினர் கட்சிக் கொடியை முறையாக அனுமதி பெற்று ஏற்றிக் கொண்டாடுங்கள் என விஜய் தெரிவித்திருந்தார்.


தொடர்ந்து வரும் 23-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற இருப்பதாகவும் அதற்காக பாதுகாப்பு மற்றும் அனுமதியை த.வெ.க கோரியுள்ளது.கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநாட்டிற்கான அனுமதிகோரி கடந்த 28 ஆம் தேதி விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து போலீசாரும் விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு 21 கேள்விகளை அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.இந்த நிலையில் மாநாட்டுக்கான இடமே இன்னமும் முடிவாகாத நிலையில் மாநாட்டை ஒத்திவைப்பது தொடர்பாகவும் நடிகர் விஜய் தரப்பு ஆலோசிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. 


அடுத்த 3 மாதங்களுக்கு மழை காலம் என்பதால் ஜனவரியில் மாநாட்டை நடத்தலாமா? என  நடிகர் விஜய்  ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்பட்டது.இந்நிலையில், மாநாட்டை ஒத்திவைப்பது தொடர்பாக வெளியான செய்திகள் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில்,


செப்டம்பர் 23-ந் தேதி திட்டமிட்டபடியே விக்கிரவாண்டியில் கட்சியின் மாநாடு நடைபெறும் என்றும், இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் ADMK டிடிவி தினகரன் காங்கிரஸ் TAMIL NADU TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் AIADMK தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் இந்திய அணி INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் கனமழை சீமான் UDHAYANIDHI STALIN CONGRESS PMK பாமக தமிழகம் கைது பிரதமர் மோடி PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை கொலை கோவை EDAPPADI PALANISWAMI COIMBATORE தீபாவளி அமமுக சட்டசபை தேர்தல் SEEMAN திருமாவளவன் THIRUMAVALAVAN மதுரை திருநெல்வேலி AJITH NELLAI நெல்லை தென்காசி விடுமுறை TAMILAGA VETTRI KAZHAGAM TAMIL ACTRESS ஓபிஎஸ் தமிழ்நாடு THOOTHUKUDI கள்ளக்காதல் NORTHEAST MONSOON அஜித் MADURAI OPS SENGOTTAIYAN திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை வன்னியர் தேவர் கொரோனா நயினார் நாகேந்திரன் கீர்த்தி சுரேஷ் டிரெண்டிங் ELECTION COMMISSION ASSEMBLY ELECTIONS டாப் நியூஸ் வானிலை ஆய்வு மையம் 2024 T20 WORLDCUP தமிழக அரசு