POLLING FLAMES

 

சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் ஆவணி தேரோட்டம் கோலாகலம்

1 year ago 02 செப்டம்பர் 2024 03:27 PM | views : 216
நாகர்கோவில்: சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் ஆவணி திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் 11 நாள் ஆவணி திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி இன்று நிறைவடைந்தது. திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி, சமய சொற்பொழிவு ஆகியவை நடைபெற்று வருகிறது. 8ம் திருவிழாவான 30ம் தேதி இரவு அய்யா வைகுண்டர் வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றங்கரையில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.






சுவாமித்தோப்பு தலைமைப்பதி முன்பிருந்து புறப்பட்ட வாகனம் நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து முத்திரி கிணற்றங்கரையை அடைந்தது. பக்தர்கள் வெற்றிலை பாக்கு, பழங்களை அய்யாவிற்கு சுருள் வைத்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து பதியின் வடக்கு வாசலில் தவக்கோலத்தில் வீற்றிருந்த அய்யா பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார். விழா நிறைவு நாளான இன்று மதியம் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் காவி உடையணிந்து நெற்றியில் திருநாமம் தரித்து தலைப்பாகை அணிந்தவாறு ”அய்யா அரகர.... சிவசிவா” என பக்தி கோஷங்களை எழுப்பினர்.

தேரோட்டத்தில் குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவில் காளை வாகனத்தில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.






மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU AIADMK இந்திய அணி பாமக ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் PMK PARLIAMENT ELECTION தமிழகம் INDIAN CRICKET TEAM CONGRESS கோவை முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் COIMBATORE EDAPPADI PALANISWAMI கொலை திருமாவளவன் பிரதமர் மோடி கைது TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் வன்னியர் தமிழ்நாடு அமமுக சீமான் KEERTHY SURESH OPS AJITH சட்டசபை தேர்தல் தமிழக சட்டசபை தேர்தல் நெல்லை SURIYA TAMIL ACTRESS NELLAI கொரோனா ஓபிஎஸ் BIGG BOSS TAMIL THIRUMAVALAVAN சூர்யா தீபாவளி கள்ளக்காதல் திருப்பரங்குன்றம் விடுமுறை தூத்துக்குடி அஜித் CSK ELECTION COMMISSION தென்காசி RAJINIKANTH பாலியல் தொல்லை வடகிழக்கு பருவமழை அன்புமணி மதுரை கீர்த்தி சுரேஷ்