கொள்ளை சம்பவத்தில் கணவன் கொலை செய்யப்பட்டதாக பெண் கூறிய வழக்கில் திடீர் திருப்பம் வெளிவந்த மனைவியின் அசிங்கம்
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S
மத்தியப்பிரதேச மாநிலம் தார் (Dhar) மாவட்டத்தை சேர்ந்தவர் தேவ் கிருஷ்ணா (Husband) - பிரியங்கா (Wife) தம்பதி. செவ்வாய்க்கிழமை இரவு 3 கொண்ட கும்பல் தேவ் கிருஷ்ணாவுக்கு வீட்டிற்குள் புகுந்து அவரை கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த ரூ.50,000 பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்றதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் இடத்துக்கு விரைந்த போலீசார் தேவ் கிருஷ்ணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கொலை நடந்த வீட்டிற்கு வந்த தடயவியல் துறையினர் வீட்டில் இருந்த தடயங்களை ஆராய்ந்தனர். அப்போது கொள்ளை நடந்தது உறுதியாகவில்லை. அங்கு நிலவிய சூழ்நிலையும் போலீசாருக்கு சந்தேகத்தை வரவழைத்தது. சந்தேகத்தின் பேரின் தேவ் கிருஷ்ணாவின் மனைவியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அந்தப்பெண் “ 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் இருவரையும் வெவ்வேறு அறைகளில் கட்டிவைத்தனர். எனது கை மற்றும் கால்களை கட்டிப்போட்டனர். எனது கணவரை கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கினர். வீட்டில் இருந்த ரூ.3,00,000 மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். என் கணவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்” எனக் கூறியுள்ளார்.
அந்தப்பெண்ணின் செல்போன் மாயமாகி இருந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். தேவ் கிருஷ்ணாவின் உடலில் மிகவும் ஆழமான காயங்கள் இருந்துள்ளது. இது திட்டமிட்ட தாக்குதல் போல் தான் இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்தப்பெண்ணிடம் கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டனர். அதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. தனது காதலன் மூலம் ஆள்வைத்து தனது கணவனை கொலை செய்து திருட்டு நடந்ததாக நாடகமாடியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து பிரியங்காவின் காதலன் கமலேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், “ பிரியங்காவுக்கு தேவ் கிருஷ்ணாவுடன் சுமார் 15 வயதில் திருமணம் நடந்துள்ளது. பிரியங்காவுக்கும் கமலேஷ்க்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப்பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. தங்களது காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவர் கிருஷ்ணாவை தீர்த்துக்கட்டுவது என முடிவு செய்துள்ளனர். பிரியங்கா சமீபத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வைத்து தனது காதலனுடன் கொலைக்கான திட்டத்தை தீட்டியுள்ளார். அதன்பேரில் கமலேஷ் தனது காதலியின் கணவனை கொலை செய்ய சுரேந்தர் என்பவரை அணுகியுள்ளார். சுரேந்தர் ரூ.1,00,000 பணத்தை பெற்றுக்கொண்டு கொலை செய்ய ஒப்புக்கொண்டார்.
சம்பவத்தன்று பிரியங்காவின் யோசனையின் பேரில் கமலேஷ் மற்றும் சுரேந்தர் இருவரும் சேர்ந்து தேவ் கிருஷ்ணாவை கொலை செய்துவிட்டு அந்த வீட்டில் கொள்ளை நடந்தது போல் செட்டப் செய்துள்ளனர். பிரியங்காவும் உறவினர்கள் மற்றும் போலீசாரிடம் அதே நாடகத்தை நடத்தினார். அவரது பேச்சில் இருந்து தடுமாற்றம் அவர் முன்னுக்கு பின் முரணாக கூறிய தகவல்கள் சந்தேகத்தை எழுப்பியது. பின்னர் தனது கணவனை கொலை செய்ததை அந்தப்பெண் ஒப்புக்கொண்டார்” என்றனர். கள்ளக்காதலுக்கு தாலி கட்டிய கணவனையே பெண் கொலை செய்த சம்பவம் அப்பகுதியி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள« முந்தைய செய்தி (Previous)
கும்பமேளா புகழ் மோனலிசா கணவர் மீது போக்ஸோ...அடுத்த செய்தி (Next) »
LIK- திரை...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: