POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

தவெக தேர்தல் அறிக்கை: நாளை மாலை வெளியிடுகிறார் விஜய்

1 day ago 15 ஏப்ரல் 2026 05:26 PM | views : 29

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை மாலை 3 மணிக்கு வெளியிட உள்ளதாக தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-


அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு, முதன்மைச் சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்தப் பிரசாரத்தில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்களைச் சந்திக்கும் போது, அவர்களுக்காகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தொலைநோக்குப் பார்வை கொண்ட செயல்திட்டங்களை அறிவித்து வருகிறார்.


இந்நிலையில், நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை (16.04.2026, வியாழக்கிழமை), சென்னை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில், மாலை 3 மணிக்கு நடைபெற உள்ள கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தொலைநோக்குப் பார்வை கொண்ட, தமிழ்நாட்டு மக்களுக்கான கழகத் தேர்தல் அறிக்கையைக் கழகத் தலைவர் வெளியிட உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் 800 பேர் மட்டுமே கலந்துகொள்ள, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.


எனவே, QR code அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ள கழக நிர்வாகிகள் தவிர்த்து, வேறு யாருக்கும் அனுமதி இல்லை. அனைவரும் தேர்தல் ஆணைய விதிகளைப் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக, இந்த நிகழ்ச்சியில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைதளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI TVK பாஜக அண்ணாமலை BJP தவெக AMMK ADMK TTV DHINAKARAN ANNAMALAI உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS MK STALIN TAMIL NADU டிடிவி தினகரன் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் AIADMK கனமழை PMK பாமக UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் திருமாவளவன் CONGRESS இந்திய அணி சட்டசபை தேர்தல் தமிழகம் கோவை கைது ரஜினிகாந்த் சீமான் நெல்லை NELLAI KEERTHY SURESH வன்னியர் COIMBATORE வடகிழக்கு பருவமழை EDAPPADI PALANISWAMI OPS PARLIAMENT ELECTION கொலை INDIAN CRICKET TEAM பிரதமர் மோடி தேவர் அமமுக ஓபிஎஸ் THIRUMAVALAVAN AJITH SURIYA தென்காசி TAMIL ACTRESS மதுரை தமிழ்நாடு பாலியல் தொல்லை TAMILAGA VETTRI KAZHAGAM MADURAI திருப்பரங்குன்றம் BIGG BOSS TAMIL PRIME MINISTER MODI சூர்யா NORTHEAST MONSOON CSK ASSEMBLY ELECTIONS தமிழக சட்டசபை தேர்தல் தூத்துக்குடி விடுமுறை அஜித் கீர்த்தி சுரேஷ் தீபாவளி ELECTION COMMISSION அன்புமணி கள்ளக்காதல் கொரோனா