POLLING FLAMES

 

குற்றால அருவிகளில் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

1 year ago 30 ஆகஸ்ட் 2024 04:57 AM | views : 227
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்யாததால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் பாறையை ஒட்டியே தண்ணீர் விழுந்தது.நேற்று காலை முதல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், செங்கோட்டை, குற்றாலம், திரவியநகர், மத்தளம்பாறை பகுதியிலும் சாரல் மழை பெய்தது.

இதன் காரணமாக பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.குறிப்பாக ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தபோது தொடர் சாரல் மழையால் அங்குள்ள அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

ஐந்தருவிக்கு மேல் உள்ள மலைப்பகுதியில் மழை பெய்ததால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என நினைத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். மாலையில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், அருவிகளில் 2-வது நாளாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவிகளில் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU இந்திய அணி AIADMK தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை காங்கிரஸ் PMK பாமக CONGRESS PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM கோவை அன்புமணி ராமதாஸ் தமிழகம் கொலை EDAPPADI PALANISWAMI திருமாவளவன் COIMBATORE TAMILAGA VETTRI KAZHAGAM OPS KEERTHY SURESH பிரதமர் மோடி AJITH அமமுக கைது தேவர் சீமான் வன்னியர் தமிழ்நாடு THIRUMAVALAVAN சூர்யா சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL TAMIL ACTRESS கொரோனா நெல்லை NELLAI தமிழக சட்டசபை தேர்தல் SURIYA ஓபிஎஸ் ELECTION COMMISSION விடுமுறை தீபாவளி பாலியல் தொல்லை தென்காசி திருப்பரங்குன்றம் அஜித் RAJINIKANTH மதுரை CSK வடகிழக்கு பருவமழை கீர்த்தி சுரேஷ் கள்ளக்காதல் அன்புமணி தூத்துக்குடி