POLLING FLAMES

 

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமான ரூ. 150 கோடி மதிப்புள்ள அரசு பொறம்போக்கு நிலம்!

1 year ago 13 ஆகஸ்ட் 2024 01:07 PM | views : 239
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமான ரூ. 150 கோடி நிலம் பொன்னேரி அருகே ஒரக்காட்டில் மீட்கப்பட்டது. நிலத்தகராறில் ஆம்ஸ்ட்ராங் மற்றும் நாகேந்திரன் இடையே ஏற்பட்ட மோதலால் கொலை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலைக்கு காரணமான 150 கோடி ரூபாய் ஆக்கிரமிப்பு நிலத்தை அரசு அதிகாரிகள் மீட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி பெரம்பூரில் 8 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.


இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், அருள், சிவசக்தி, தமாகாவை சேர்ந்த ஹரிஹரன், அதிமுக பிரமுகர் மலர்க்கொடி, பாஜக பிரமுகர் அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் உள்ளிட்ட 22 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து கொலைக்கான விசாரணையும் நடந்து வருகிறது.

இந்நிலையில், இன்று திருவள்ளூர் மாவட்டம் ஒரக்காட்டில் உள்ள பொன்வண்டு சோப்பு நிறுவன இடத்தை அதிகாரிகள் மீட்டனர். பொன்வண்டு நிறுவனத்தின் 14.5 ஏக்கர் நிலத்தை கைமாற்றி விடுவதில் ஆம்ஸ்ட்ராங் – ரவுடி நாகேந்திரன் இடையே மோதல் ஏற்பட்டது. ரூ. 150 கோடி மதிப்பு நிலம் தொடர்பான மோதலே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU AIADMK இந்திய அணி பாமக ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் PMK PARLIAMENT ELECTION தமிழகம் INDIAN CRICKET TEAM CONGRESS கோவை அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் COIMBATORE EDAPPADI PALANISWAMI கொலை திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM சீமான் தேவர் பிரதமர் மோடி OPS வன்னியர் அமமுக தமிழ்நாடு KEERTHY SURESH AJITH கைது கொரோனா ஓபிஎஸ் BIGG BOSS TAMIL சூர்யா TAMIL ACTRESS SURIYA நெல்லை NELLAI தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் விடுமுறை அன்புமணி அஜித் தென்காசி ELECTION COMMISSION வடகிழக்கு பருவமழை கீர்த்தி சுரேஷ் CSK மதுரை கள்ளக்காதல் தீபாவளி RAJINIKANTH திருப்பரங்குன்றம் தூத்துக்குடி பாலியல் தொல்லை