POLLING FLAMES

 

மனைவி குடும்பம் நடத்த வர மறுப்பு: வாலிபர் எடுத்த விபரீத முடிவு

1 hour ago 27 ஏப்ரல் 2026 02:49 PM | views : 5

சேலம்,

சேலம் கருங்கல்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சபரிநாதன் (29 வயது). இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சபரிநாதனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இதை சங்கீதா கண்டித்து வந்தார். ஆனால் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மது அருந்துவதாக சபரிநாதன் தெரிவித்தார். இதனால் அவரது மனைவி கோபித்துகொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.


இந்த நிலையில், சங்கீதா வேலை செய்யும் இடத்திற்கு சென்ற சபரிநாதன் அவரை சமாதானம் செய்து குடும்பம் நடத்த வருமாறு பேசியுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த சபரிநாதன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அறைக்குள் சென்ற அவர் நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்கவில்லை.


இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாயார் மகாராணி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, சபரிநாதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. இது குறித்து செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக் கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சபரிநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக அண்ணாமலை சென்னை CHENNAI பாஜக BJP ANNAMALAI TVK ADMK AMMK தவெக உதயநிதி ஸ்டாலின் MK STALIN டிடிவி தினகரன் TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற தேர்தல் PMK மு.க.ஸ்டாலின் AIADMK ரஜினிகாந்த் பாமக TAMIL NADU ANBUMANI RAMADOSS UDHAYANIDHI STALIN கனமழை தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் இந்திய அணி காங்கிரஸ் அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION திருமாவளவன் கோவை INDIAN CRICKET TEAM CONGRESS அமமுக OPS EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH சீமான் கொலை தமிழகம் வன்னியர் கைது COIMBATORE தேவர் BIGG BOSS TAMIL TAMIL ACTRESS AJITH வடகிழக்கு பருவமழை RAJINIKANTH THIRUMAVALAVAN NELLAI ஓபிஎஸ் நெல்லை கொரோனா பிரதமர் மோடி சட்டசபை தேர்தல் மதுரை தூத்துக்குடி SURIYA தென்காசி தமிழக சட்டசபை தேர்தல் விடுமுறை திருப்பரங்குன்றம் கள்ளக்காதல் ELECTION COMMISSION அஜித் சூர்யா கீர்த்தி சுரேஷ் அன்புமணி தமிழ்நாடு CSK TAMILAGA VETTRI KAZHAGAM 2024 T20 WORLDCUP