POLLING FLAMES

 

கணவனுடன் தகாத உறவில் இருந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றிய மனைவி...வீடியோ வைரல்

1 year ago 13 ஆகஸ்ட் 2024 12:27 PM | views : 252
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் ராமர்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி பார்வதி (36). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண், பெண் குழந்தை உள்ளது. சுரேஷ் திருவள்ளூர் மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்துள்ளார்.

சுரேசுக்கும் புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்த ராஜேஸ்வரி (வயது 40) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் குடும்பத்தினருக்கு தெரியாமல் புட்லூர் அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் ராஜேஸ்வரி திருவள்ளூரில் தனியாக வசித்து வந்தார்.இந்தநிலையில் சுரேசின் காய்கறி கறிகடைக்கு ராஜேஸ்வரி அடிக்கடி வந்து வியாபாரம் செய்தார்.

இதனை அறிந்த சுரேசின் மனைவி பார்வதி கண்டித்தார். மேலும் ராஜேஸ்வரியை கடைக்கு வரக்கூடாது என்று எச்சரித்துள்ளார். எனினும் கடந்த 9-ந்தேதி ராஜேஸ்வரி மீண்டும் சுரேசின் காய்கறி கடைக்கு வந்து வியாபாரத்தில் ஈடுபட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பார்வதி மற்றும் அவரது உறவினர்கள் மார்க்கெட்டிற்கு வந்து கடையில் இருந்த ராஜேஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது பார்வதி மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ராஜேஸ்வரி மீது ஊற்றியுள்ளார். அந்த நேரத்தில் பின்னால் இருந்த விளக்கிலிருந்து ராஜேஸ்வரி மீது தீப்பற்றியது. இதில் உடல் முழுவதும் 80 சதவீத தீக்காயத்துடன் ராஜேஸ்வரி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து பார்வதி, அவரது கணவர் சுரேஷ் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 6 பேரை கைது செய்தனர்.இந்தநிலையில் இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து திருவள்ளூர் டவுன் போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ளனர். இதற்கிடையே மார்க்கெட்டில் ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றிய வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU ANBUMANI RAMADOSS இந்திய அணி AIADMK தமிழக வெற்றிக் கழகம் கனமழை காங்கிரஸ் ரஜினிகாந்த் PMK UDHAYANIDHI STALIN பாமக CONGRESS தமிழகம் INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION கோவை முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் கொலை COIMBATORE EDAPPADI PALANISWAMI TAMILAGA VETTRI KAZHAGAM தமிழ்நாடு பிரதமர் மோடி வன்னியர் AJITH OPS கைது KEERTHY SURESH சீமான் அமமுக தேவர் சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS BIGG BOSS TAMIL சூர்யா ஓபிஎஸ் கொரோனா நெல்லை தமிழக சட்டசபை தேர்தல் NELLAI SURIYA THIRUMAVALAVAN தென்காசி வடகிழக்கு பருவமழை அஜித் மதுரை தூத்துக்குடி கள்ளக்காதல் விடுமுறை பாலியல் தொல்லை CSK RAJINIKANTH கீர்த்தி சுரேஷ் அன்புமணி தீபாவளி திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION