POLLING FLAMES

 

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?

1 year ago 12 ஆகஸ்ட் 2024 08:59 AM | views : 214
சென்னை, தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை (13-ந்தேதி) நீலகிரி, கோவை மலை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் (14-ந்தேதி) நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

15-ம் தேதி, அதாவது சுதந்திர தினத்தன்று (வியாழக்கிழமை) கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.16-ம் தேதி கோவையில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்யும்.

18-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் AIADMK TAMIL NADU இந்திய அணி ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் PMK தமிழக வெற்றிக் கழகம் கனமழை UDHAYANIDHI STALIN பாமக காங்கிரஸ் PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் கோவை CONGRESS INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI தமிழகம் கொலை திருமாவளவன் COIMBATORE அன்புமணி ராமதாஸ் அமமுக தமிழ்நாடு கைது KEERTHY SURESH பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM சீமான் தேவர் வன்னியர் OPS நெல்லை SURIYA AJITH THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் கொரோனா சூர்யா NELLAI தமிழக சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் TAMIL ACTRESS BIGG BOSS TAMIL வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் CSK திருப்பரங்குன்றம் அன்புமணி தென்காசி விடுமுறை மதுரை தூத்துக்குடி தீபாவளி அஜித் பாலியல் தொல்லை RAJINIKANTH