Tamil News & POLLING

 

ஜனநாயகன் பட ரிலீஸ் முதல்.. தேர்தலில் போட்டியிடுவது வரை.. விஜய்க்கு தொடரும் சிக்கல்கள்..!

14 hours ago 19 மார்ச் 2026 05:44 AM | views : 16
சென்னை,

சினிமாத் துறையில் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்குள் நுழைந்தவர், நடிகர் விஜய். அவரது நடிப்பில் கடைசி படமான 'ஜனநாயகன்', பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால், 'சென்சார்' பிரச்சினையால் படம் இன்று வரை வெளியாகவில்லை. தொடர்ந்து சிக்கல்களை சந்தித்து வருகிறது.

இடையே, கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்த துயரச் சம்பவம் தொடர்பாக, நடிகர் விஜய்யிடம் நடத்தப்பட்டு வரும் சி.பி.ஐ. விசாரணையாலும் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். மேலும், அவரது மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கு, அவரை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

2 தொகுதிகளில் விஜய் போட்டி?இந்த நிலையில், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடும் என்று விஜய் அறிவித்துள்ளார். ஏற்கனவே, 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில், மீதமுள்ள 174 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த தேர்தலில் அவருடைய வெற்றி முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை நிரூபிக்கும் வகையில், பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தேர்தல் பணிமனை ஏ.சி. வசதியுடன் அமைக்கப்பட்டும் வருகிறது.

சொத்து விவரங்கள் தாக்கல் இந்த நிலையில், தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ந் தேதி தொடங்க இருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், வேட்புமனு தாக்கலின்போது தங்களுடைய அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களையும், தனது மனைவியின் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.

அந்த வகையில், நடிகர் விஜய்யும் தனது மற்றும் தன்னுடைய மனைவியின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். தற்போது, சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருந்தாலும், விவாகரத்து பெறும்வரை விஜய்யின் மனைவியாகவே அவர் கருதப்படுவார். இந்த வழக்கு விசாரணையும் ஏப்ரல் 20-ந் தேதிதான், அதாவது தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்புதான் வருகிறது.

தேர்தலில் போட்டியிடுவதிலும் சிக்கல்எனவே, வேட்புமனு தாக்கலின்போது நடிகர் விஜய், மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பையும் காட்டியாக வேண்டும். அவ்வாறு இவர் காட்டும் சொத்து மதிப்புக்கு சங்கீதா எதுவும் ஆட்சேபனை தெரிவித்தால், வேட்புமனுவை ஏற்பதிலும் சிக்கல் ஏற்படும்.

அந்த வகையில், நடிகர் விஜய் தேர்தலில் போட்டியிடுவதிலும் சிக்கல் நீடித்து வருகிறது. மற்றொரு புறம், விஜய்யை எதிர்த்து வலுவான வேட்பாளரை களம் இறக்கவும் தி.மு.க. திட்டமிட்டு வருகிறது.

பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் பட்சத்தில், அவரை எதிர்த்து அமைச்சர் பி.கே.சேகர்பாபுவை களம் இறக்கலாமா? என்று தி.மு.க. தலைமை யோசித்து வருகிறது. இல்லை என்றால், நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, தி.மு.க. இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல், கூட்டணி கட்சிகளில் ஒன்றான சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோரில் ஒருவரை களம் இறக்கவும் தி.மு.க. திட்டமிட்டுள்ளது.

சோதனை மேல் சோதனைஇப்படி, 'ஜனநாயகன்' பட ரிலீஸ் விவகாரம் முதல் சி.பி.ஐ. விசாரணை, மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு, இப்போது தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் என நடிகர் விஜய்யை பிரச்சினைகள் 'சோதனை மேல் சோதனை' என்ற வகையில், தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK ANNAMALAI தவெக ADMK AIADMK AMMK பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU டிடிவி தினகரன் TTV DHINAKARAN MK STALIN எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் முக ஸ்டாலின் சீமான் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி ரஜினிகாந்த் தமிழகம் கனமழை PMK PARLIAMENT ELECTION INDIAN CRICKET TEAM பாமக UDHAYANIDHI STALIN CONGRESS அன்புமணி ராமதாஸ் கைது பிரதமர் மோடி EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH அமமுக சட்டசபை தேர்தல் கொலை SEEMAN வடகிழக்கு பருவமழை NELLAI கோவை திருமாவளவன் COIMBATORE தமிழ்நாடு மதுரை TAMIL ACTRESS OPS கள்ளக்காதல் நெல்லை திருநெல்வேலி THIRUMAVALAVAN TAMILAGA VETTRI KAZHAGAM தென்காசி தீபாவளி TAMIL CINEMA நயினார் நாகேந்திரன் ஓபிஎஸ் நாம் தமிழர் கட்சி விடுமுறை தேவர் ASSEMBLY ELECTIONS MADURAI AJITH கீர்த்தி சுரேஷ் வன்னியர் தமிழக அரசு NORTHEAST MONSOON ELECTION COMMISSION THOOTHUKUDI திருப்பரங்குன்றம் டிரெண்டிங் டாப் நியூஸ் பாலியல் தொல்லை