சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி, த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 27 வி.ஐ.பி. தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தேர்தல் களம் கண்டாலும், அவர்கள் இந்த பட்டியலுக்குள் கொண்டுவரப்படவில்லை. 27 வி.ஐ.பி. தொகுதிகள் விவரம் வருமாறு:-
கொளத்தூர் சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நிற்கும் 3 முக்கிய கட்சி வேட்பாளர்கள் விவரமும் தரப்பட்டுள்ளது.
தி.மு.க. - மு.க.ஸ்டாலின்
அ.தி.மு.க. - சந்தானகிருஷ்ணன்
த.வெ.க. - வி.எஸ்.பாபு
நா.த.க. - சவுந்திரபாண்டியன் லூடர் சேத்
எடப்பாடி சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார்.
தி.மு.க. - காசி
அ.தி.மு.க. - எடப்பாடி பழனிசாமி
த.வெ.க. - அருண்குமார்
நா.த.க. - பிரியதர்சினி
பெரம்பூர் சென்னை பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய் போட்டியிடுகிறார்.
தி.மு.க. - ஆர்.டி.சேகர்
பா.ம.க. - திலகபாமா
த.வெ.க. - ஜோசப் விஜய்
நா.த.க. - வெற்றித்தமிழன்
திருச்சி கிழக்கு திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய் போட்டியிடுகிறார்.
தி.மு.க. - இனிகோ இருதயராஜ்
அ.தி.மு.க. - க.ராஜசேகரன்
த.வெ.க. - ஜோசப் விஜய்
நா.த.க. - கிருஷ்ணசாமி
காரைக்குடி காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் - எஸ்.மாங்குடி
அ.ம.மு.க. - தேர்போகி பாண்டி
த.வெ.க. - பிரபு
நா.த.க. - சீமான்
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார்.
தி.மு.க. - உதயநிதி ஸ்டாலின்
அ.தி.மு.க. - ஆதிராஜாராம்
த.வெ.க. - டி.செல்வம்
நா.த.க. - ஆயிசா பேகம்
போடிநாயக்கனூர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில், முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்தவருமான ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.
தி.மு.க. - ஓ.பன்னீர்செல்வம்
அ.தி.மு.க. - வி.டி.நாராயணசாமி
த.வெ.க. - பிரகாஷ்
நா.த.க. - கலையரசு
சாத்தூர் சாத்தூர் தொகுதியில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார்.
தி.மு.க. - அ.கடற்கரை ராஜ்
பா.ஜ.க. - நயினார் நாகேந்திரன்
த.வெ.க. - அஜித்
நா.த.க. - ஆனந்தராஜா
ஸ்ரீபெரும்புதூர் (தனி)ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் - செல்வப்பெருந்தகை
அ.தி.மு.க. - கே.பழனி
த.வெ.க. - தென்னரசு
நா.த.க. - சிந்து
அவினாசி (தனி) அவினாசி தொகுதியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் போட்டியிடுகிறார்.
தி.மு.க. - டாக்டர் கோகிலா மணி
பா.ஜ.க. - எல்.முருகன்
த.வெ.க. - கமலி
நா.த.க. - மேனகா
மயிலாப்பூர் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் முன்னாள் கவர்னரும், தமிழக பா.ஜ.க. தலைவர்களில் ஒருவருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார்.
தி.மு.க. - தா.வேலு
பா.ஜ.க. - டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
த.வெ.க. - வெங்கட்ரமணன்
நா.த.க. - அருண்
விருத்தாசலம் விருத்தாசலம் தொகுதியில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.
தே.மு.தி.க. - பிரேமலதா விஜயகாந்த்
பா.ம.க. - டாக்டர் தமிழரசி ஆதிமூலம்
த.வெ.க. - விஜய்
நா.த.க. - ஆனந்தி
தர்மபுரி தர்மபுரி தொகுதியில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிடுகிறார்.
தே.மு.தி.க. - வி.இளங்கோவன்
பா.ம.க. - சவுமியா அன்புமணி
த.வெ.க. - சிவன்
நா.த.க. - சாந்தலட்சுமி
காட்பாடி காட்பாடி தொகுதியில் தி.மு.க. பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் போட்டியிடுகிறார்.
தி.மு.க. - துரைமுருகன்
அ.தி.மு.க. - வி.ராமு
த.வெ.க. - சுதாகர்
நா.த.க. - திருக்குமரன்
கோவை வடக்கு கோவை வடக்கு தொகுதியில் பா.ஜ.க. அகில இந்திய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.
தி.மு.க. - செந்தமிழ்செல்வன்
பா.ஜ.க. - வானதி சீனிவாசன்
த.வெ.க. - சம்பத்குமார்
நா.த.க. - நர்மதா
தியாகராய நகர் சென்னை தியாகராய நகர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் போட்டியிடுகிறார்.
தி.மு.க. - ராஜா அன்பழகன்
அ.தி.மு.க. - தி.நகர் சத்தியா
த.வெ.க. - புஸ்சி ஆனந்த்
நா.த.க. - அனுஷா விஜயகுமார்
வில்லிவாக்கம் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக தேர்தல் பரப்புரை செயலாளர் ஆதவ் அர்ஜூனா போட்டியிடுகிறார்.
தி.மு.க. - கார்த்திக் மோகன்
அ.தி.மு.க. - விஜயகுமார்
த.வெ.க. - ஆதவ் அர்ஜூனா
நா.த.க. - ரோஷினி
திரு.வி.க நகர் (தனி) சென்னை திரு.வி.க. நகர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி போட்டியிடுகிறார்.
தி.மு.க. - கே.எஸ்.ரவிச்சந்திரன்
அ.தி.மு.க. - பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
த.வெ.க. - பல்லவி
நா.த.க. - ஜெகதீஷ் சந்தர்
திருச்செங்கோடு திருச்செங்கோடு தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் போட்டியிடுகிறார்.
கொ.ம.தே.க. - ஈ.ஆர்.ஈஸ்வரன்
அ.தி.மு.க. - ஆர்.சந்திரசேகர்
த.வெ.க. - அருண்ராஜ்
நா.த.க. - ரேவதி
நாகப்பட்டினம் நாகப்பட்டினம் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா போட்டியிடுகிறார்.
ம.நே.ம.க. - ஜவாஹிருல்லா
அ.தி.மு.க. - தங்க.கதிரவன்
த.வெ.க. - சுகுமார்
நா.த.க. - சா.பாத்திமா பர்கானா
சிதம்பரம் சிதம்பரம் தொகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி போட்டியிடுகிறார்.
ம.ஜ.க. - தமிமுன் அன்சாரி
அ.தி.மு.க. - கே.ஏ.பாண்டியன்
த.வெ.க. - பாரி
நா.த.க. - செ.தமிழ்
சிவகங்கை சிவகங்கை தொகுதியில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் போட்டியிடுகிறார்.
முக்குலத்தோர் புலிப்படை - கருணாஸ்
அ.தி.மு.க. - பி.ஆர்.செந்தில்நாதன்
த.வெ.க. - குழந்தை ராணி நாச்சியார்
நா.த.க. - இந்துஜா ரமேஷ்
பென்னாகரம்பென்னாகரம் தொகுதியில் பா.ம.க. கவுரவ தலைவர் (டாக்டர் ராமதாஸ் அணி) ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம்.தமிழ்குமரன், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் - ஜி.கே.எம்.தமிழ்குமரன்
பா.ம.க. - பாடி வெ.செல்வம்
த.வெ.க. - கஜேந்திரன்
நா.த.க. - பழனியம்மாள்
மதுரை மத்தி மதுரை மத்தி தொகுதியில் நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி போட்டியிடுகிறார்.
தி.மு.க. - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
புதிய நீதிக்கட்சி - சுந்தர் சி
த.வெ.க. - முஸ்தபா
நா.த.க. - கா.அப்துல் ஹக்கிம்
ராஜபாளையம் ராஜபாளையம் தொகுதியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியனின் மனைவி பிரிசில்லா பாண்டியன் போட்டியிடுகிறார்.
தி.மு.க. - தங்கப்பாண்டியன்
த.ம.மு.க. - பிரிசில்லா பாண்டியன்
த.வெ.க. - ஜெகதீஸ்வரி
நா.த.க. - கார்த்திக்
விருதுநகர் விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.
தே.மு.தி.க. - விஜய பிரபாகர்
அ.தி.மு.க. - வி.ஜி.கணேசன்
த.வெ.க. - செல்வம்
நா.த.க. - லட்சுமணன்
ராதாபுரம் ராதாபுரம் தொகுதியில் சபாநாயகர் மு.அப்பாவு போட்டியிடுகிறார்.
தி.மு.க. - மு.அப்பாவு
பா.ஜ.க. - எஸ்.பி.பாலகிருஷ்ணன்
த.வெ.க. - சதீஷ் கிறிஸ்டோபர்
நா.த.க. - கிரிஜா தாமரைப்பாண்டியன்
« முந்தைய செய்தி (Previous)
டெல்லி சட்டமன்ற வளாக கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த கார்...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: