Tamil News & polling
பாலிவுட்டில் "கனவுக்கன்னி" என்று அழைக்கப்பட்ட நடிகை ஹேமமாலினி, கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களம் இறங்கினார். அந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.
மீண்டும் 2019-ம் ஆண்டு தேர்தலிலும் அதே தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது, தொடர்ந்து 3-வது முறையாக மதுரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களம் காண்கிறார். 75 வயது ஆனவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பது இல்லை என்ற எழுதப்படாத விதியை தளர்த்தி, 75 வயதான ஹேமமாலினிக்கு பா.ஜ.க. மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க. சார்பில் மதுரா தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் நடிகை ஹேமமாலினி வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஹேமமாலினி மனு தாக்கல் செய்யும் போது அவருடன் அம்மாநில நீர் சக்தித்துறை மந்திரி ஸ்வதந்த்ரா தேவ் சிங் உடனிருந்தார்.வேட்புமனு தக்கல் செய்த பின்னர் ஹேமமாலினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மதுரா தொகுதியின் வளர்ச்சிக்காக மூன்றாவது முறையாக இங்கு வந்துள்ளேன். மீதமுள்ள அனைத்து பணிகளையும் செய்து முடிப்பேன். மேலும் இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றால் மதுராவில் உள்ள யமுனா நதியை சுத்தப்படுத்தும் பணியை முடிப்பதும், 84 கோசி பரிக்ரமா பாதை மற்றும் ரெயில் பாதை அமைப்பது ஆகிய முக்கிய பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
உத்தரபிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 26ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவடைகிறது. நாளை (5ம் தேதி) வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வருகிற 8ம் தேதி வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP தமிழக வெற்றிக் கழகம் Tamil Nadu TTV Dhinakaran MK Stalin எடப்பாடி பழனிசாமி ADMK திருமாவளவன் AIADMK மு.க.ஸ்டாலின் AMMK தமிழ்நாடு Thirumavalavan அன்புமணி ராமதாஸ் டிடிவி தினகரன் செங்கோட்டையன் Anbumani Ramadoss சீமான் முக ஸ்டாலின் Sengottaiyan PMK Seeman வடகிழக்கு பருவமழை Edappadi Palaniswami Tamilaga Vettri Kazhagam பாமக சட்டசபை தேர்தல் Congress