POLLING FLAMES

 

உத்தர பிரதேசம்: வந்தே மாதரம் பாட மறுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

5 months ago 13 நவம்பர் 2025 10:17 AM | views : 257
லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ‘வந்தே மாதரம்’ பாடலை பாடுவதை கட்டாயமாக்க வேண்டும் என அந்த மாநிலத்தின் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இளம் தலைமுறையினர் மத்தியில் தேசப்பற்று அதிகரிக்கும் என்றும், இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் பாரத மாதாவை எதிர்ப்பவர்களாக கருதப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில் உத்தர பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அதிகாலை அசெம்ப்ளி கூட்டத்தின்போது ‘வந்தே மாதரம்’ பாடப்படுகிறது. அந்த வகையில் அலிகார் மாவட்டத்தில் உள்ள குதூப் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில், காலை நேரத்தில் நடைபெறும் அசெம்ப்ளி கூட்டத்தின்போது ‘வந்தே மாதரம்’ பாடலை பாட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதன்படி அனைவரும் ‘வந்தே மாதரம்’ பாடலை பாடிய நிலையில், ஷம்சுல் ஹாசன் என்ற ஆசிரியர் மட்டும் ‘வந்தே மாதரம்’ பாட மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் அவர் முறையிட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சக ஆசிரியர்களுடன் ஷம்சுல் ஹாசன் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரி ராகேஷ் குமார் சிங்கிடம் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சுஷ்மா ராணி புகார் அளித்தார். இந்த புகார் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது ‘வந்தே மாதரம்’ பாடுவது தங்கள் மத கோட்பாட்டிற்கு எதிராக உள்ளது என்று ஷம்சுல் ஹாசன் கூறியதாக தலைமை ஆசிரியர் சுஷ்மா ராணி தெரிவித்தார்.

இதையடுத்து ஆசிரியர் ஷம்சுல் ஹாசனை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை அதிகாரி ராகேஷ் குமார் உத்தரவிட்டார். அதே சமயம், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஆசிரியர் ஷம்சுல் ஹாசன் மறுத்துள்ளார். ‘வந்தே மாதரம்’ பாட வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு முன்பாக மாணவர்களின் பெற்றோரிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்ற மட்டுமே கூறியதாகவும், சக ஆசிரியர்களுடன் மோதலில் ஈடுபடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் AIADMK இந்திய அணி பாமக PMK தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் கனமழை தமிழகம் CONGRESS கோவை INDIAN CRICKET TEAM அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் கொலை திருமாவளவன் COIMBATORE EDAPPADI PALANISWAMI அமமுக தேவர் KEERTHY SURESH TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி சீமான் வன்னியர் தமிழ்நாடு கைது OPS AJITH கொரோனா THIRUMAVALAVAN நெல்லை சட்டசபை தேர்தல் NELLAI SURIYA TAMIL ACTRESS ஓபிஎஸ் சூர்யா தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL ELECTION COMMISSION CSK அஜித் அன்புமணி கள்ளக்காதல் RAJINIKANTH திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் விடுமுறை வடகிழக்கு பருவமழை தீபாவளி பாலியல் தொல்லை தூத்துக்குடி தென்காசி மதுரை