POLLING FLAMES

 

கச்சத்தீவு விவகாரம் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை சவால்

2 years ago 04 ஏப்ரல் 2024 06:03 AM | views : 211
கோவை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக கோவை கணபதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ ப்பெருந்தகை எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசியதாவது:-இந்தியா கூட்டணிக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எழுச்சியோடு வாக்களிக்க மக்கள் தயாராகி ட்டனர்.

பிரதமர் மோடி தேர்தல் அறிக்கையில் சொன்ன எந்த வாக்குறுதியையுமே நிறைவேற்றவில்லை. ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் சொன்னதில் 80 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார்.தற்போது நாட்டில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளது. அந்த போதைப்பொருள்கள் குஜராத்தில் உள்ள 2 துறைமுகங்களில் இருந்து தான் வருகிறது. அந்த துறை முகத்தை நடத்துவது யாரென பிரதமர் மோடிக்கு தெரியாதா? இந்த நாட்டை குட்டிச்சுவராக்க பா.ஜனதா துடித்துக்கொண்டு இருக்கிறது.

இந்த தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை எது சொன்னாலும் பொய் தான். தற்போது பிரதமர் மோடியும், அண்ணாமலையும் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசி வருகின்றனர். இந்திராகாந்தி தேசநலனுக்காகவும், நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் வாழ்ந்தவர். அவரை பிரதமர் மோடியும், அண்ணாமலையும் கிண்டல் செய்கின்றனர்.வெஜ் பேங் என்ற ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என அண்ணாமலை படித்து தெரிந்து கொள்ளட்டும். 1976-ம்ஆண்டு மார்ச் 23-ந்தேதி கச்சத்தீவுக்கு ஒரு ஒப்பந்தம்.வெஜ் பேங்குக்கு ஒரு ஒப்பந்தம் என்று 2 ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது. அந்த ஒப்பந்தம் பற்றி தெரிந்து கொண்டு அண்ணாமலை பேச வேண்டும்.

அதுதொடர்பாக என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? இந்திராகாந்தி போட்ட அந்த ஒப்பந்தத்தின்படி தான் கன்னியாகுமரியில் இருந்து 50 நாட்டிக்கல் மைல் தூரத்திலும், கொழும்புவில் இருந்து 150 நாட்டிக்கல் மைல் தூரத்திலும் உள்ள இந்திய எல்லையில், உலகத்தில் இல்லாத அளவுக்கு கனிம வளங்கள், கடல் வளங்கள் கடலுக்கு அடியில் இருக்கிறது என்று கண்டுபிடித்து சொல்லி இருக்கிறார்கள். எனவே அண்ணாமலை கச்சத்தீவு-வெஜ்பேங் ஒப்பந்தம் குறித்து தெரியாமல் எதுவும் பேசக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU AIADMK ANBUMANI RAMADOSS PMK INDIAN CRICKET TEAM காங்கிரஸ் ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN கனமழை பாமக PARLIAMENT ELECTION கோவை CONGRESS முக ஸ்டாலின் கொலை திருமாவளவன் தமிழகம் COIMBATORE அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI கைது சீமான் OPS TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி தமிழ்நாடு அமமுக வன்னியர் தேவர் KEERTHY SURESH TAMIL ACTRESS தமிழக சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL SURIYA AJITH கொரோனா ஓபிஎஸ் சூர்யா நெல்லை NELLAI மதுரை ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் அன்புமணி விடுமுறை அஜித் CSK வடகிழக்கு பருவமழை தீபாவளி கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் RAJINIKANTH தென்காசி பாலியல் தொல்லை தூத்துக்குடி