POLLING 📊 TN ELECTION 2026

 

பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் வேட்புமனு நிராகரிக்க வாய்ப்பு?

2 hours ago 03 ஏப்ரல் 2026 03:03 AM | views : 107

சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய்யின் வேட்புமனு நிராகரிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கட்சித் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடவுள்ளார். இந்த இரு தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான வேட்புமனுவையும் விஜய் சமர்ப்பித்துள்ளார்.


இந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் விஜய் சமர்ப்பித்த வேட்புமனுவில் குளறுபடி இருப்பதாகக் கூறப்படுகிறது. தேர்தல் விதிமுறைகளின்படி, ஒரு வேட்பாளரின் பிரமாணப் பத்திரத்தில் தகவல்களை மறைப்பது அல்லது தவறான தகவல்களை அளிப்பது தண்டனைக்குரிய செயல் மட்டுமின்றி, அவரின் வேட்புமனு நிராகரிக்கப்படவும் வாய்ப்புள்ளது..


விஜய் முதலில் சமர்ப்பித்த பெரம்பூர் தொகுதி வேட்புமனுவில், தன் மீது எந்த வழக்கும் இல்லை எனக் குறிப்பிட்ட்டுள்ளார். ஆனால், திருச்சி கிழக்கில் சமர்ப்பித்த வேட்புமனுவில், 2025-ல் பதிவுசெய்யப்பட்ட ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.ஒரே வேட்பாளர் இரு வெவ்வேறு தொகுதிகளில் சமர்ப்பித்துள்ள வேட்புமனுக்களில் இவ்வாறு முரண்பட்ட தகவல்கள் இருப்பது, அவரின் வேட்புமனுவை நிராகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தக் கூடும்.


இருப்பினும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் (ஏப். 6) இன்னும் முடிவடையாததால், திருத்தப்பட்ட புதிய பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்வதன் மூலம் வேட்புமனு நிராகரிப்பிலிருந்து விஜய் தப்பிக்க முடியும்.வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை நடைபெறும் ஏப்ரல் 7 ஆம் தேதியில், விஜய்யின் வேட்புமனு ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது இறுதி செய்யப்படும்..

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK திமுக விஜய் VIJAY அதிமுக சென்னை பாஜக BJP CHENNAI அண்ணாமலை TVK தவெக AMMK ANNAMALAI TTV DHINAKARAN டிடிவி தினகரன் MK STALIN ADMK ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் எடப்பாடி பழனிசாமி AIADMK TAMIL NADU மு.க.ஸ்டாலின் PMK ரஜினிகாந்த் முக ஸ்டாலின் பாமக காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் தமிழகம் உதயநிதி ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் CONGRESS PARLIAMENT ELECTION கைது சட்டசபை தேர்தல் கனமழை கோவை கொலை UDHAYANIDHI STALIN சீமான் திருமாவளவன் EDAPPADI PALANISWAMI பிரதமர் மோடி இந்திய அணி AJITH அமமுக தமிழ்நாடு KEERTHY SURESH தீபாவளி COIMBATORE தென்காசி தேவர் வன்னியர் TAMIL ACTRESS வடகிழக்கு பருவமழை OPS ஓபிஎஸ் NELLAI நெல்லை ASSEMBLY ELECTIONS THIRUMAVALAVAN TAMILAGA VETTRI KAZHAGAM கொரோனா SEEMAN மதுரை MADURAI SURIYA PRIME MINISTER MODI RAJINIKANTH பாலியல் தொல்லை கீர்த்தி சுரேஷ் அஜித் டிரெண்டிங் டாப் நியூஸ் நடிகை திருப்பரங்குன்றம் CSK INDIAN CRICKET TEAM ELECTION COMMISSION இந்தியா தூத்துக்குடி