POLLING FLAMES

 

பலாப்பழத்தை மறக்கடித்த பழக்கதோஷம்.. இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்... ஓ.பி.எஸ்

2 years ago 03 ஏப்ரல் 2024 05:27 AM | views : 221
ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. ஆதரவுடன் சுயேட்சையாக களமிறங்கியுள்ள ஓ.பன்னீர்செல்வம் கேட்ட சின்னம் கிடைக்காமல், கிடைத்த பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.ராமேசுவரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு பிரசாரத்தை தொடங்கிய அவர் நேற்று பரமக்குடி பகுதியில் வாக்கு சேகரித்தார்.

தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ள பா.ஜ.க. தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.மீனவர்கள் அதிகம் நிறைந்துள்ள ராமநாதபுரம் தொகுதியில் களம் காணும் ஓ.பி.எஸ்.சும் தன் பங்குக்கு கச்சத்தீவை பிரதமர் மோடியுடன் இணைந்து மீட்க பாடுபடுவேன் என்று கூறி வருகிறார். இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கு தான் இந்த தேர்தலில் வெற்றி பெறுவது மிகவும் அவசியம் என்ற கருத்தையும் தொடர்ந்து பிரசாரத்தின்போது கூறிவருகிறார்.

இந்தநிலையில் பரமக்குடி அருகே போகலூர், துரத்தியனேந்தல், மஞ்சூர் உள்ளிட்ட கிராமங்களில் ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தனக்கு ஒதுக்கப்பட்ட பலாப்பழம் சின்னத்தை மறந்து விட்டு, வெற்றியின் சின்னமாம் இலைக்கு வாக்களியுங்கள் என்று பேசினார்.இதைக்கேட்டு அங்கு திரண்டிருந்தவர்கள் சிரித்தனர். இருந்தபோதிலும் தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் பழக்க தோஷத்தில் சொல்லி விட்டேன் என்று மழுப்பலாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இப்பகுதியில் இருக்கும் நிரந்தர குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நல்ல ஒரு பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு உங்களில் ஒருவனாக இருந்து செயல்படுவேன் என்றார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் TAMIL NADU இந்திய அணி AIADMK காங்கிரஸ் ரஜினிகாந்த் PMK கனமழை தமிழக வெற்றிக் கழகம் பாமக UDHAYANIDHI STALIN கோவை தமிழகம் INDIAN CRICKET TEAM அன்புமணி ராமதாஸ் CONGRESS PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் திருமாவளவன் EDAPPADI PALANISWAMI COIMBATORE கொலை TAMILAGA VETTRI KAZHAGAM தமிழ்நாடு பிரதமர் மோடி OPS அமமுக KEERTHY SURESH சீமான் AJITH கைது வன்னியர் தேவர் BIGG BOSS TAMIL சூர்யா TAMIL ACTRESS தமிழக சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் சட்டசபை தேர்தல் நெல்லை SURIYA NELLAI கொரோனா THIRUMAVALAVAN கள்ளக்காதல் பாலியல் தொல்லை திருப்பரங்குன்றம் மதுரை தூத்துக்குடி CSK தீபாவளி விடுமுறை RAJINIKANTH நடிகை கீர்த்தி சுரேஷ் வடகிழக்கு பருவமழை அன்புமணி அஜித் தென்காசி ELECTION COMMISSION