POLLING FLAMES

 

வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி

2 years ago 03 ஏப்ரல் 2024 08:49 AM | views : 217
கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 29-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.இருந்தபோதிலும் கேரளாவில் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ள தொகுதி வயநாடு. ஏனென்றால் தற்போது அந்த தொகுதியில் எம்.பி.யாக இருக்கும் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.

அவருடன் அந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா, பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் சுரேந்திரன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் இருந்தபோதிலும் கேரள மாநிலத்தில் அவை தனித்தனியாக போட்டியிடுகின்றன. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆனி ராஜா போட்டியிடுவார் என்று அந்த கட்சி அறிவித்துவிட்டது.

இதனால் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடக்கூடாது என்று கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. ஆனால் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் அறிவித்தது.இந்த விவகாரம் இரு கட்சியினரின் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒருவர் மீது ஒருவர் எதிர் கேள்விகளை கேட்டு வருகின்றனர். இதனால் இந்தியா கூட்டணியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜா பிரசாரத்தை தொடங்கிவிட்டார். அதேபோல் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் அந்த கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரனும் பிரசாரத்தில் குதித்தார்.

காங்கிரஸ் வேட்பாளரான ராகுல் காந்தி எப்போது பிரசாரத்துக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் இருந்து வந்தது. இந்நிலையில் வயநாடு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ராகுல் காந்தி இன்று கேரளாவுக்கு வந்தார்.டெல்லியில் இருந்து விமானத்தில் வந்த அவர், விமான நிலையத்தில் இருந்து மூப்பைநாட்டில் உள்ள தலக்கால் மைதானத்திற்கு ஹெலிகாப்டரில் வந்தார். அங்கு அவரை காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். பின்பு ராகுல் காந்தி அங்கிருந்து கல்பெட்டா சென்றார்.கல்பெட்டா பகுதியில் நடந்த ரோடு-ஷோவில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டினார். ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தியும் ரோடு-ஷோ சென்றார். அவர்களை சாலையின் இருபுறமும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்தனர்.

ராகுல் காந்தியின் ரோடு-ஷோ கல்பெட்டா பகுதியில் இருந்து வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை நடைபெற்றது. ரோடு-ஷோவை முடித்துக்கொண்டு ராகுல் காந்தி, வேட்புமனு தாக்கல் செய்ய கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றார்.அங்கு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ரேணுராஜிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். வேட்புமனு தாக்கலை முடித்துக்கொண்டு ராகுல் காந்தி மீண்டும் டெல்லி திரும்புகிறார்.

அவர் தேர்தல் பிரசாரத்துக்காக சில நாட்களில் மீண்டும் கேரளாவுக்கு வர உள்ளார். ராகுல் காந்தி கடந்த பாராளுமன்ற தேர்தலில் வயநாடு தொகுதியில 4.37லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.#WATCH | Lok Sabha elections 2024 | Kerala: Congress party's sitting MP and candidate Rahul Gandhi files his nomination from WayanadHis sister and party's general secretary Priyanka Gandhi Vadra is also present with him.CPI has fielded Annie Raja from this seat and BJP has… pic.twitter.com/NoFpSbcLto— ANI (@ANI) April 3, 2024 மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் TAMIL NADU இந்திய அணி AIADMK காங்கிரஸ் ரஜினிகாந்த் PMK கனமழை தமிழக வெற்றிக் கழகம் பாமக UDHAYANIDHI STALIN கோவை தமிழகம் INDIAN CRICKET TEAM அன்புமணி ராமதாஸ் CONGRESS PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் திருமாவளவன் EDAPPADI PALANISWAMI COIMBATORE கொலை TAMILAGA VETTRI KAZHAGAM தமிழ்நாடு பிரதமர் மோடி OPS அமமுக KEERTHY SURESH சீமான் AJITH கைது வன்னியர் தேவர் BIGG BOSS TAMIL சூர்யா TAMIL ACTRESS தமிழக சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் சட்டசபை தேர்தல் நெல்லை SURIYA NELLAI கொரோனா THIRUMAVALAVAN கள்ளக்காதல் பாலியல் தொல்லை திருப்பரங்குன்றம் மதுரை தூத்துக்குடி CSK தீபாவளி விடுமுறை RAJINIKANTH நடிகை கீர்த்தி சுரேஷ் வடகிழக்கு பருவமழை அன்புமணி அஜித் தென்காசி ELECTION COMMISSION