POLLING FLAMES

 

வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த முதல்-அமைச்சரின் உத்தரவாதம் என்னவானது? ராமதாஸ் கேள்வி

2 years ago 31 மார்ச் 2024 06:34 AM | views : 248
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை, உரிய தரவுகளைத் திரட்டி இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2022-ம் ஆண்டு இதே நாளில் தான் தீர்ப்பு வழங்கியது.


அதன்பின் இரு ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில் இன்று வரை வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.


சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது, ''கண்டிப்பாக வன்னியகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும். தேவைப்பட்டால் வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவேன்" என்று உத்தரவாதம் அளித்தார். அதன்பின் பல முறை சட்டப்பேரவையிலும் இது தொடர்பாக வாக்குறுதிகள் அளித்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே.... அந்த வாக்குறுதிகள் எல்லாம் என்னவாயின? இது தான் வன்னியர்களுக்கு விரைந்து சமூகநீதி வழங்கும் அழகா? வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்குவதில் மட்டும் ஏன் இவ்வளவு வன்மம்?

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை எப்போது நிறைவேற்றுவீர்கள்? சுப்ரீம் கோர்ட்டே அனுமதி வழங்கியும் கூட வன்னியர்களுக்கு வழங்க வேண்டிய இட ஒதுக்கீட்டை வழங்க மறுக்கும் நீங்கள் சமூக நீதி பற்றி பேசலாமா? அவ்வாறு பேசுவது சமூகநீதிக்கே இழுக்கு அல்லவா?" இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் AIADMK இந்திய அணி தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் கனமழை காங்கிரஸ் PMK UDHAYANIDHI STALIN பாமக தமிழகம் முக ஸ்டாலின் கோவை INDIAN CRICKET TEAM அன்புமணி ராமதாஸ் CONGRESS PARLIAMENT ELECTION EDAPPADI PALANISWAMI கொலை திருமாவளவன் COIMBATORE KEERTHY SURESH AJITH OPS வன்னியர் சீமான் அமமுக பிரதமர் மோடி தேவர் தமிழ்நாடு கைது TAMILAGA VETTRI KAZHAGAM BIGG BOSS TAMIL NELLAI நெல்லை சட்டசபை தேர்தல் சூர்யா TAMIL ACTRESS தமிழக சட்டசபை தேர்தல் கொரோனா ஓபிஎஸ் THIRUMAVALAVAN SURIYA விடுமுறை RAJINIKANTH ELECTION COMMISSION தீபாவளி அஜித் தூத்துக்குடி மதுரை அன்புமணி கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை தென்காசி வடகிழக்கு பருவமழை திருப்பரங்குன்றம் CSK கள்ளக்காதல்