POLLING 📊 TN ELECTION 2026

 

ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!

9 hours ago 10 ஏப்ரல் 2026 12:45 AM | views : 28

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்.23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் சசிகலாவை பொதுச் செயலராகக் கொண்ட அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சி (ராமதாஸ் தரப்பு) களம் காண்கிறது.


பாமக நிறுவனர் ராமதாஸுடனான மோதலுக்குப் பின்னர் அவரின் மகன் அன்புமணி வசமிருக்கும் பாமகவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், தனித்துக் களம்காண முடிவெடுத்துள்ள ராமதாஸ், 30 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை சமீபத்தில் மூன்று கட்டங்களாக வெளியிட்டிருந்தார்.தருமபுரி, பென்னகரம் உள்பட 30 தொகுதிகளில் ராமதாஸ் தலைமையிலான பாமக சுயேச்சையாகப் போட்டியிடுகிறது.இந்த நிலையில், தமிழ்நாடு தேர்தலில் 30 தொகுதிகளில் தனது ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் போட்டியிடுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். அந்த 30 பேருக்கும் சிலிண்டர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Party founder Ramadoss has announced that the 'Cylinder' symbol has been allotted to 30 PMK candidates contesting the Tamil Nadu Legislative Assembly elections.



பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK ANNAMALAI தவெக AMMK ADMK எடப்பாடி பழனிசாமி MK STALIN ANBUMANI RAMADOSS AIADMK டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் கனமழை TAMIL NADU TTV DHINAKARAN PMK உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் பாமக காங்கிரஸ் CONGRESS தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் ரஜினிகாந்த் திருமாவளவன் சட்டசபை தேர்தல் கைது இந்திய அணி INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION தமிழகம் UDHAYANIDHI STALIN COIMBATORE கோவை EDAPPADI PALANISWAMI அமமுக வடகிழக்கு பருவமழை சீமான் கொலை AJITH KEERTHY SURESH THIRUMAVALAVAN பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM ஓபிஎஸ் வன்னியர் நெல்லை NELLAI TAMIL ACTRESS தென்காசி தேவர் தமிழ்நாடு OPS ASSEMBLY ELECTIONS ELECTION COMMISSION தூத்துக்குடி தீபாவளி NORTHEAST MONSOON விடுமுறை கள்ளக்காதல் அஜித் திருப்பரங்குன்றம் தமிழக சட்டசபை தேர்தல் SURIYA MADURAI CSK கீர்த்தி சுரேஷ் PRIME MINISTER MODI மதுரை BIGG BOSS TAMIL பாலியல் தொல்லை