Tamil News & POLLING

 

ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்த விவகாரம்: முடிவுக்கு வந்த அண்ணாமலையின் வீடியோ சர்ச்சை

1 year ago 30 மார்ச் 2024 05:13 AM | views : 147
நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்ட தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்கெனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதற்கிடையே, கோவையில் தேர்தல் பிரசாரத்தின்போது ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு தமிழக பா.ஜ.க. தலைவரும், கோவை வேட்பாளருமான அண்ணாமலை மறைத்து வைத்து பணம் கொடுப்பதுபோல் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி காவல்துறைக்கு உத்தரவிட்டார். இந்த குறித்து அண்ணாமலை கூறுகையில், இந்த வீடியோ கடந்த ஆண்டு 'என் மண் என் மக்கள்' யாத்திரையின்போது எடுக்கப்பட்டது. அன்பு மற்றும் மரியாதையின் அடையாளமாக, ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பது நமது தமிழகக் கலாச்சாரத்தில் உள்ளது.

தேர்தல் நேரத்தில் மட்டும் இதனை நாங்கள் கடைபிடிப்பதில்லை என்று தெரிவித்தார். இந்த வீடியோ தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்த துவங்கினர். இந்த நிலையில், ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு அண்ணாமலை பணம் கொடுப்பது போல் பரவிய வீடியோ, 2023 ஜூலையில் எடுக்கப்பட்டது என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இது தேர்தல் விதிமுறை மீறலில் வராது என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை தவெக TVK ANNAMALAI ADMK AMMK AIADMK TAMIL NADU உதயநிதி ஸ்டாலின் MK STALIN எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN டிடிவி தினகரன் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் கனமழை தமிழகம் இந்திய அணி INDIAN CRICKET TEAM PMK UDHAYANIDHI STALIN CONGRESS ரஜினிகாந்த் பாமக சீமான் அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION பிரதமர் மோடி அமமுக COIMBATORE EDAPPADI PALANISWAMI தீபாவளி கோவை சட்டசபை தேர்தல் KEERTHY SURESH கொலை வடகிழக்கு பருவமழை NELLAI கைது TAMILAGA VETTRI KAZHAGAM SEEMAN தென்காசி மதுரை தமிழ்நாடு திருமாவளவன் TAMIL ACTRESS AJITH திருநெல்வேலி நெல்லை கள்ளக்காதல் THIRUMAVALAVAN OPS MADURAI வன்னியர் 2024 T20 WORLDCUP அஜித் TAMIL CINEMA SENGOTTAIYAN திருப்பரங்குன்றம் டிரெண்டிங் டாப் நியூஸ் கீர்த்தி சுரேஷ் ஓபிஎஸ் விடுமுறை கொரோனா வானிலை ஆய்வு மையம் நடிகை THOOTHUKUDI ASSEMBLY ELECTIONS NORTHEAST MONSOON ELECTION COMMISSION தேவர் தமிழக அரசு