POLLING FLAMES

 

அதிகரிக்கும் புதிய வகை கொரோனா.. மத்திய மந்திரி எச்சரிக்கை தகவல்

2 years ago 20 டிசம்பர் 2023 03:20 PM | views : 243
இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு புதிய வகை கொரோனா JN.1 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினரான வி.கே. பால் தெரிவித்துள்ளார். கோவாவில் 19 பேருக்கும், மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களில் ஒருவருக்கும் கொரோனா JN.1 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதை அடுத்து மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் முன்னேற்பாடுகள் குறித்து சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். "புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது அவசியம் ஆகும். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மத்திய மற்றும் மாநில அளவில் முறையான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்," என்று மந்திரி மாண்டவியா தெரிவித்தார். கொரோனா இன்னும் நிறைவுபெறாத நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் மற்றும் அறிகுறிகள் மற்றும் அதன் தீவிரம் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் ஆகும். கொரோனா பாதிப்பு தொடர்பாக மாநில அரசுகள் விழிப்புடன் இருப்பது அவசியம் ஆகும் என்று அவர் மேலும் தெரிவித்தார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU AIADMK ANBUMANI RAMADOSS PMK INDIAN CRICKET TEAM காங்கிரஸ் ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN கனமழை பாமக PARLIAMENT ELECTION கோவை CONGRESS முக ஸ்டாலின் கொலை திருமாவளவன் தமிழகம் COIMBATORE அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI கைது சீமான் OPS TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி தமிழ்நாடு அமமுக வன்னியர் தேவர் KEERTHY SURESH TAMIL ACTRESS தமிழக சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL SURIYA AJITH கொரோனா ஓபிஎஸ் சூர்யா நெல்லை NELLAI மதுரை ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் அன்புமணி விடுமுறை அஜித் CSK வடகிழக்கு பருவமழை தீபாவளி கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் RAJINIKANTH தென்காசி பாலியல் தொல்லை தூத்துக்குடி