Tamil News & POLLING

 

அண்ணாத்தவிற்கு இல்லாத ரூல்ஸ் மாநாடுக்கு மட்டும் ஏன்? சந்தேகமா இருக்கே? கேள்வி கேட்ட கஸ்தூரி!

4 years ago 22 நவம்பர் 2021 03:55 PM | views : 158
தியேட்டர்களில் இனி சினிமா பார்க்கக் கொரோனா வேக்சின் சான்றிதழ் வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு குறித்து நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பி உள்ளார்.

தியேட்டர்களில் இனி சினிமா பார்க்கக் கொரோனா வேக்சின் போட்ட சான்றிதழ் அவசியம் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் மாநாடு படம் வெளியாக உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தீபாவளிக்கு வெளியாகாமல் தள்ளிப்போன படம் ஒருவழியாக நவம்பர் 25-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் புதிய கட்டுப்பாடு மாநாடு படக்குழுவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


இதனால் தங்கள் படத்திற்கு ரசிகர்கள் வருவது குறையும் என்று மாநாடு படக்குழுவினர் கருதுகிறார்கள். மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஏற்கனவே இது தொடர்பாக தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டு இருந்தார். அதோடு தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே திரையரங்கங்களில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு திரைத்துறையை வெகுவாக பாதிக்கும் என்று கூறி மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில்தான், தியேட்டர்களில் இனி சினிமா பார்க்கக் கொரோனா வேக்சின் போட்ட சான்றிதழ் வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு குறித்து நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பி உள்ளார். கஸ்தூரி செய்துள்ள போஸ்டில், தியேட்டரில் சினிமா பார்க்க திமுக அரசு இரண்டு டோஸ் கொரோனா சான்றிதழ்களை கேட்கிறது. இது நல்ல முன்னெடுப்பு. ஆனால் இந்த அறிவிப்பு வெளியான நேரம்தான் புதிராக உள்ளது.

எஸ்டிஆர் நடிப்பில் மாநாடு போன்ற பெரிய படம் வரும் போது இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியாகி உள்ள நேரம்தான் சுவாரசியமாக உள்ளது. இரண்டு வாரத்திற்கு முன்பே இது போன்ற விதிமுறையை கொண்டு வர அரசுக்கு பெரிய வாய்ப்பு இருந்தது தீபாவளி அன்று சன் பிக்சர்ஸ் வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் போதே இந்த அறிவிப்பை வெளியிட்டு கொரோனா வேக்சின் குறித்த விழிப்புணர்வை மக்களை அரசு கொண்டு சென்று இருக்கலாம்.

ஆனால் இப்படி ஒரு பொன்னான வாய்ப்பை அரசு மிஸ் செய்தது ஏன்? முன்னதாக மாநாடு படமே தீபாவளி அன்று வெளியாகாமல் அண்ணாத்த படத்திற்கு வழி விடும் வகையில் ஒத்திவைக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியானதையும் இந்த நேரத்தில் கணக்கில் எடுக்க வேண்டும். அண்ணாத்த படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் 50 சதவிகித சீட் கட்டுப்பாடு தியேட்டர்களில் இருந்து நீக்கப்பட்டதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அதேபோல் பீஸ்ட் படம் வெளியாகும் முன் தற்போது இருக்கும் கட்டுப்பாடுகளிலும் தளர்வு அறிவிக்கப்படுமா என்று பலர் நினைக்கும் வாய்ப்புகளும் உள்ளன. மேலும், அனைத்து டாஸ்மாக் கடைகள், கட்சி கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்கள், பொது போக்குவரத்து மற்றும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டால், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் இந்த அரசாங்கத்தின் உறுதியை நாம் நிச்சயமாகப் பாராட்டலாம்.

பள்ளிகள், சந்தைகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் வேக்சின் போட்டவர்களை எந்நேரமும் கண்காணிப்பது சாத்தியம் இல்லைதான். ஆனால் ரேஷன் அல்லது மதுபானங்களை விற்கும் டாஸ்மாக் கடைகளுக்கு கடைகளில் எளிதாக வேக்சின் போட்டவர்களை கண்காணிக்க முடியும்.

ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், யுகே, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில், சினிமாக்கள், பாடல் விழாக்கள், வழிபாட்டுத் தலங்கள், பப்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவற்றில் நுழைவதற்கு கோவிட் வேக்சின் சான்றிதழ் அவசியம். அதனால் இது தமிழக அரசின் மிகவும் முக்கியமான, வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றுதான் கூற வேண்டும். ஆனால் இந்த விதி எல்லோருக்குமானதா என்பதுதான் கேள்வியே என்று கஸ்தூரி தனது பேஸ்புக் போஸ்ட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK ADMK பாராளுமன்ற தேர்தல் எடப்பாடி பழனிசாமி AIADMK TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU டிடிவி தினகரன் காங்கிரஸ் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS இந்திய அணி முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM கனமழை சீமான் ரஜினிகாந்த் CONGRESS PMK UDHAYANIDHI STALIN பாமக தமிழகம் PARLIAMENT ELECTION பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் வடகிழக்கு பருவமழை COIMBATORE கோவை KEERTHY SURESH தீபாவளி EDAPPADI PALANISWAMI சட்டசபை தேர்தல் அமமுக SEEMAN கைது கொலை ஓபிஎஸ் TAMIL ACTRESS TAMILAGA VETTRI KAZHAGAM கள்ளக்காதல் மதுரை விடுமுறை திருநெல்வேலி AJITH தமிழ்நாடு தென்காசி THIRUMAVALAVAN NELLAI நெல்லை THOOTHUKUDI திருமாவளவன் அஜித் வன்னியர் தமிழக அரசு TAMIL CINEMA நயினார் நாகேந்திரன் OPS பாலியல் தொல்லை தேவர் திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் NORTHEAST MONSOON டிரெண்டிங் ELECTION COMMISSION வானிலை ஆய்வு மையம் டாப் நியூஸ் கொரோனா 2024 T20 WORLDCUP SENGOTTAIYAN ASSEMBLY ELECTIONS MADURAI