Tamil News & POLLING

 

தனது பெயரை அதிரடியாக மாற்றிய பீலா ராஜேஷ்.. பெயர் மாற்றியதன் பின்னணி

2 years ago 12 டிசம்பர் 2023 02:36 PM | views : 148
கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா தொடங்கியதில் இருந்து தினமும் தொலைக்காட்சியில் தோன்றி செய்தியாளர்களைச் சந்தித்து மருத்துவ அறிக்கையை வெளியிட்டு மீடியா வெளிச்சத்தைப் பெற்றவர் பீலா ராஜேஷ். ஒரு கட்டத்தில் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்திப்பது நிறுத்தப்பட்டது. மருத்துவ அறிக்கைகள் மட்டும் வெளியிடப்பட்டன.

சில நாட்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்து புகழ்பெற்றவர் பீலா ராஜேஷ். சமீபத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார். இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆக பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டிருந்தார்.


இவரது கணவர் பெயர் ராஜேஷ் தாஸ். சிறப்பு டிஜிபியாக இருந்தவர். பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறை தண்டனை பெற்றார். அதன்பிறகு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. தற்போது சைலண்ட் மோடிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் தான் தன்னுடைய பெயரை பீலா ராஜேஷ் என்பதில் இருந்து பீலா வெங்கடேசன் என மாற்றி கொள்ள முடிவு செய்திருக்கிறார்.


ஒருவர் தன்னுடைய பெயரை மாற்ற வேண்டும் எனில் அரசுக்கு முறையாக விண்ணப்பிக்க வேண்டும். ஏனெனில் இதுவரை பல்வேறு அரசு ஆவணங்களில் நமது பெயர் பதிவு செய்யப்பட்டிருக்கும். செய்தித்தாள்களில் கொடுத்துள்ள விளம்பரத்தில் அதில், ”இனி வரும் காலங்களில் டாக்டர். பீலா வெங்கடேசன் என்று மட்டுமே அறியப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

அதாவது ராஜேஷ் என்ற கணவர் பெயரை நீக்கி விட்டு தந்தை பெயர் வெங்கடேசனை சேர்த்து கொண்டுள்ளார். தனது சமூக வலைதளப் பக்கங்களிலும் பெயரை மாற்றியிருக்கிறார். இந்த பெயர் மாற்றத்திற்கான காரணம் குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK ANNAMALAI தவெக AMMK MK STALIN பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN ADMK டிடிவி தினகரன் AIADMK TAMIL NADU காங்கிரஸ் எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் INDIAN CRICKET TEAM தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் இந்திய அணி முக ஸ்டாலின் ANBUMANI RAMADOSS CONGRESS கனமழை ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN PMK தமிழகம் சீமான் பாமக கொலை அன்புமணி ராமதாஸ் கைது PARLIAMENT ELECTION பிரதமர் மோடி கோவை EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH தீபாவளி SEEMAN அமமுக சட்டசபை தேர்தல் COIMBATORE வடகிழக்கு பருவமழை ஓபிஎஸ் தமிழ்நாடு மதுரை AJITH TAMIL ACTRESS THIRUMAVALAVAN விடுமுறை திருமாவளவன் நெல்லை கள்ளக்காதல் NELLAI திருநெல்வேலி TAMILAGA VETTRI KAZHAGAM தென்காசி வானிலை ஆய்வு மையம் 2024 T20 WORLDCUP டிரெண்டிங் தமிழக அரசு டாப் நியூஸ் THOOTHUKUDI தேவர் ASSEMBLY ELECTIONS வன்னியர் NORTHEAST MONSOON OPS நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றம் அஜித் ELECTION COMMISSION MADURAI கீர்த்தி சுரேஷ்