தூத்துக்குடி, கன்னையாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல சுழற்சி நிலவும் காரணத்தால், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த, நான்கு மாவட்டங்களில் உள்ள கடற்கரை பகுதிகளிலும், இவற்றை ஒட்டியுள்ள ஊர்களிலும், பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் அதிகனமழை பெய்து வருகிறது.
இதற்கிடையே, நாளையும் (18.12.2023) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககனமழை பெய்யக் கூடும் என்றும் கூறியுள்ளது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S