POLLING FLAMES

 

திருவட்டார் அருகே பாலியல் பலாத்காரம் செய்து பெண் கொலை: என்ஜினீயர் கைது

3 years ago 17 பிப்ரவரி 2023 07:18 AM | views : 274
திருவட்டார் : திருவட்டாரை அடுத்த மூவாற்று முகம் பகுதியை சேர்ந்தவர் எட்வின் (வயது 28). டிப்ளமோ என்ஜினீயர். எட்வினின் தந்தை இறந்து விட்டார். அதன்பின்பு எட்வின் தாயாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இவர்களின் பக்கத்து வீட்டில் உறவினர் கமலதாஸ் வசித்து வருகிறார்.

கமலதாசின் மனைவி லைலா( 47). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இதனால் அவர்கள் கணவர் வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்களின் மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் வீட்டில் கமலதாசும், அவரது மனைவி லைலாவும் மட்டுமே இருந்தனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் லைலா தலையில் காயங்களுடன் மயங்கி கிடந்தார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.இந்த சம்பவம் குறித்து கமலதாஸ் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கமலதாஸ், வீட்டில் இல்லாத போது அவரது உறவினர் எட்வின், லைலா வீட்டிற்கு சென்று வந்தது தெரியவந்தது. எட்வினை தேடிய போது அவர் தலைமறைவாகி இருந்தார்.

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட லைலாவின் உடல் நிலை மேலும் மோசமடைந்தது. அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.அப்போது ஏற்பட்ட தகராறில் லைலா தலையில் தாக்கப்பட்டு மயக்கம் அடைந்துள்ளார் என்று டாக்டர்கள் கூறினர். லைலாவை பாலியல் பலாத்காரம் செய்து, தாக்கியது யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் லைலாவின் பக்கத்து வீட்டில் வசித்த உறவுக்கார வாலிபர் எட்வின் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் எட்வினை ஆற்றூர் கழுவன்திட்டை பகுதியில் வைத்து பிடித்தனர்.பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் லைலாவை தாக்கி, பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார்.

லைலாவின் கணவர் வீட்டில் இல்லாத போது அவர் படுக்கை அறையை எட்டிப்பார்ப்பேன். அங்கு அவர் தூங்கும் அழகை ரசிப்பேன். இதனை ஒருநாள் லைலா பார்த்து விட்டார். இதுபற்றி அவர் எனது தாயாரிடம் கூறி என்னை அவமானப்படுத்தினார்.இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்தேன், என்றார்.போலீசார் எட்வினை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
இதற்கிடையே ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த லைலா, சிகிச்சை பலன் இன்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக இறந்தார்.இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இது தொடர்பாக எட்வினை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU AIADMK ANBUMANI RAMADOSS PMK INDIAN CRICKET TEAM காங்கிரஸ் ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN கனமழை பாமக PARLIAMENT ELECTION கோவை CONGRESS முக ஸ்டாலின் கொலை திருமாவளவன் தமிழகம் COIMBATORE அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI கைது சீமான் OPS TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி தமிழ்நாடு அமமுக வன்னியர் தேவர் KEERTHY SURESH TAMIL ACTRESS தமிழக சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL SURIYA AJITH கொரோனா ஓபிஎஸ் சூர்யா நெல்லை NELLAI மதுரை ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் அன்புமணி விடுமுறை அஜித் CSK வடகிழக்கு பருவமழை கள்ளக்காதல் தீபாவளி கீர்த்தி சுரேஷ் RAJINIKANTH தென்காசி பாலியல் தொல்லை தூத்துக்குடி