POLLING FLAMES

 

'காதலை வெளிப்படுத்த பயப்படாதீங்க' - கிருத்திகா உதயநிதி வைரல் ட்வீட்

3 years ago 05 ஜனவரி 2023 10:53 AM | views : 253
உதயநிதி ஸ்டாலினின் மனைவியும் இயக்குநருமான கிருத்திகா ஜீ5 ஓடிடி தளத்துக்காக பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸை இயக்கியிருந்தார். காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், கௌரி கிஷன் போன்ற பலர் நடித்திருந்த இந்தத் சீரிஸானது விம்ரசன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்துக்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பு காரணமாக தற்போது பேப்பர் ராக்கெட் பார்ட் 2 தற்போது தயாராகி வருவதாக உதயநிதி சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். தற்போது அதற்கான பணிகளில் கிருத்திகா ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது.

உதயநிதியும் கிருத்திகாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். பேப்பர் ராக்கெட் பட புரொமோஷன் நிகழ்ச்சிகளில் தங்கள் காதல் கதைகளை இருவரும் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டனர். சமீபத்தில் உதயநிதி விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது கண்கள் கலங்க உதயநிதியை கிருத்திகா கட்டியணைத்து பாராட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் கிருத்திகா உதயநிதி காதல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது வைரலாகிவருகிறது. அவரது பதிவில், காதலிக்கவும், அதனை வெளிப்படுத்தவும் பயம்கொள்ளாதீர்கள். இது இயற்கையின் முழு மகிமையையும் பரிந்துகொள்ள ஒரு வழி என்று குறிப்பிட்டிருந்தார்.

சிவா, பிரியா ஆனந்த் இணைந்து நடித்த 'வணக்கம் சென்னை' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அனிருத்தின் பாடல்கள், சந்தானத்தின் காமெடி ஆகியவை ஹைலைட்டாக அமைந்த இந்தப் படம் நல்ல வெற்றியைப் பதிவு செய்தது. பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் காளி படத்தை இயக்கியிருந்தார். வணக்கம் சென்னையைப் போல இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN டிடிவி தினகரன் TTV DHINAKARAN இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் AIADMK ANBUMANI RAMADOSS TAMIL NADU INDIAN CRICKET TEAM கனமழை UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் காங்கிரஸ் PMK தமிழக வெற்றிக் கழகம் பாமக முக ஸ்டாலின் CONGRESS PARLIAMENT ELECTION கோவை EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் தமிழகம் கொலை COIMBATORE திருமாவளவன் வன்னியர் தமிழ்நாடு தேவர் KEERTHY SURESH TAMILAGA VETTRI KAZHAGAM சீமான் அமமுக OPS பிரதமர் மோடி கைது NELLAI தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS ஓபிஎஸ் சூர்யா நெல்லை AJITH SURIYA கொரோனா RAJINIKANTH மதுரை கள்ளக்காதல் பாலியல் தொல்லை விடுமுறை CSK ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் அன்புமணி தென்காசி அஜித் தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தீபாவளி கீர்த்தி சுரேஷ்