POLLING FLAMES

 

பெரியார் சிலை விவகாரத்தில் கனல் கண்ணன் தலைமறைவு!

3 years ago 04 ஆகஸ்ட் 2022 11:00 AM | views : 232
பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசிய கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் தலைமறைவாகி உள்ளார்.

இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணம் என்ற பிரச்சார பயணத்தில் இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில செயலாளர் கனல் கண்ணன் பேசிய சில விஷயங்கள் தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில செயலாளர் பொறுப்பில் இருக்கிறார்.



இந்து முன்னணி நிகழ்ச்சிகள் பலவற்றில் இவர் பேசி இருக்கிறார். இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் மதுரவாயலில் நடைபெற்ற இந்து முன்னணி நிகழ்ச்சியில் பெரியாருக்கு எதிராக கடுமையான சில கருத்துக்களை கனல் கண்ணன் வைத்தார்.


ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று கனல் கண்ணன் பேசி இருந்தார்.


அவர் தனது பேச்சில், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன்பாக பெரியார் சிலை இருக்க கூடாது. கடவுள் இல்லை என்று சொன்னவன் சிலை எதற்கு கோவிலுக்கு முன் இருக்க வேண்டும். அவரின் சிலையை இடிக்க வேண்டும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அவர்கள் தரிசனம் முடித்து இவரின் சிலையை பார்ப்பது சரியாக இருக்காது. அவரின் சிலையை உடைத்தால் அதுதான் உண்மையான எழுச்சி, என்று கனல் கண்ணன் கூறினார்.



இவரின் பேச்சு இணையம் முழுக்க பெரிய அளவில் சர்ச்சனையாது. கனல் கண்ணனுக்கு எதிராக திமுகவினரும், திகவினரும் கடும் விமர்சனங்களை வைத்தனர். கனல் கண்ணனுக்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழத்தை சேர்ந்தவர்கள் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து கலவரத்தை தூண்டுதல்,. இரண்டு பிரிவிற்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் தலைமறைவாகி உள்ளார். போலீசார் இவரை கைது செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் அவர் தனது வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகிவிட்டார். அவரின் வீட்டிற்கு போலீசார் சென்ற நிலையில்,வீட்டில் இருந்த அவரின் குடும்ப உறுப்பினர்கள்.. கனல் கண்ணன் இங்கே இல்லை. அவர் எங்கே சென்றார் என்று தெரியவில்லை என்று தெரிவித்து உள்ளனர். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் MK STALIN பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS AIADMK TAMIL NADU UDHAYANIDHI STALIN கனமழை INDIAN CRICKET TEAM ரஜினிகாந்த் காங்கிரஸ் PMK தமிழக வெற்றிக் கழகம் பாமக முக ஸ்டாலின் CONGRESS PARLIAMENT ELECTION கோவை EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் தமிழகம் கொலை COIMBATORE திருமாவளவன் OPS வன்னியர் தமிழ்நாடு கைது பிரதமர் மோடி அமமுக சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM KEERTHY SURESH தேவர் BIGG BOSS TAMIL THIRUMAVALAVAN TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் NELLAI நெல்லை AJITH சூர்யா தமிழக சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் SURIYA கொரோனா திருப்பரங்குன்றம் அன்புமணி ELECTION COMMISSION தென்காசி மதுரை RAJINIKANTH கள்ளக்காதல் விடுமுறை CSK பாலியல் தொல்லை அஜித் தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தீபாவளி கீர்த்தி சுரேஷ்