POLLING FLAMES

 

திருமணம் செய்து வைத்த ஆயருடன் மனைவிக்கு கள்ளத்தொடர்பு!

4 years ago 22 ஏப்ரல் 2022 01:21 PM | views : 320
திருமணம் செய்து வைத்த ஆயருடன் மனைவிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளதாக கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் புளியந்தாங்கல் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் எஸ்.பி. யிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், ராணிப்பேட்டை ஆசிரியர் காலனியில் வசிக்கும் ஆயர் மூலம் சென்னையை சேர்ந்த அவரது உறவினர் பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இவருக்கும் எனக்கும் கடந்த 4.12.2019 அன்று திருமணம் நடந்தது. எங்களுக்கு சிஎஸ்ஐ ஆயர் திருமணத்தை நடத்தி வைத்தார்.

நர்சிங் படித்துள்ள எனது மனைவி, சென்னை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.


இந்நிலையில் எனது மனைவி என்னிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு, ஆயருடன் அடிக்கடி காரில் சென்று வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்தபிறகும் அவர் ஆயருடன் பல மணிநேரம் செல்போனில் பேசுவார்.

என்னுடன் இல்லற வாழ்வில் ஈடுபடுவதை தவிர்த்து வந்தார். அவரை தொட முயற்சித்தாலும் என்னை தாக்கி விரட்டுவார்.

கடந்த 2020, ஜனவரி 14, 15, 16ம் தேதிகளில் முகாம் பணிக்கு போகவேண்டும் எனக்கூறிவிட்டு ஆயருடன் வெளியே சென்று தங்கினார்.

இதையறிந்த நான் எனது மனைவியிடம் கேட்டபோது, ‘திருமணத்திற்கு முன்பே அவருடன் உறவில் இருந்தேன். இனி நான் துண்டித்து கொள்கிறேன்’ என்று எனது மனைவி கூறினார்.

ஆனால் துண்டித்து கொள்ளவில்லை.

இதனால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனது கை விரல் கூட படாத நிலையில், கடந்த 13.10.20 அன்று எனது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதுகுறித்து கேட்டபோது, குழந்தைக்கு தந்தை ஆயர்தான் என்கிறார்.

இதை போலீசில் கூறினால், வரதட்சணை கேட்பதாக உன் மீதும், உன் பெற்றோர் மீதும் புகார் கொடுத்து உள்ளே தள்ளிவிடுவேன் என்று மனைவி மிரட்டுகிறார்.

இதனால் மனவேதனை அடைந்த நான், விவாகரத்து கோரி வேலூர் முதன்மை நீதிமன்றத்தில் மனு கொடுத்தேன். இதனால் என்னையும் என் குடும்பத்தினரையும் ஒழித்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.

எனவே ஆயர் மற்றும் எனது மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

இந்த புகாரை கேட்டு எஸ்.பி. அதிர்ச்சியடைந்துள்ளார்.


மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK AMMK ADMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN டிடிவி தினகரன் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி ANBUMANI RAMADOSS TAMIL NADU AIADMK காங்கிரஸ் ரஜினிகாந்த் PMK கனமழை தமிழக வெற்றிக் கழகம் INDIAN CRICKET TEAM UDHAYANIDHI STALIN பாமக CONGRESS PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் கோவை கொலை EDAPPADI PALANISWAMI COIMBATORE தமிழகம் திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் OPS வன்னியர் அமமுக தமிழ்நாடு தேவர் கைது சீமான் KEERTHY SURESH பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM நெல்லை கொரோனா சட்டசபை தேர்தல் சூர்யா தமிழக சட்டசபை தேர்தல் NELLAI BIGG BOSS TAMIL SURIYA TAMIL ACTRESS THIRUMAVALAVAN ஓபிஎஸ் AJITH தீபாவளி கள்ளக்காதல் ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் அஜித் தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் RAJINIKANTH அன்புமணி வடகிழக்கு பருவமழை மதுரை CSK தென்காசி பாலியல் தொல்லை விடுமுறை