POLLING FLAMES

 

வாயை திறந்தாலே ஆபாசம்.. ரவுடி பேபி சூர்யாவின் யூடியூப் சேனல்கள் முடக்கம்!

4 years ago 05 ஜனவரி 2022 05:29 AM | views : 264
சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவேற்றி பிரபலமான ரவுடி பேபி சூர்யா, சிக்கா என்ற சிக்கந்தருடன் இணைந்து பல வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார். இவரது வீடியோக்களில் சர்ச்சைகளுக்கும் ஆபாசமான வார்த்தைகளுக்கும் பஞ்சமிருக்காது.

இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் ஆகியோரின் யூடியூப் சேனல்களை முடக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவேற்றி பிரபலமான ரவுடி பேபி சூர்யா, சிக்கா என்ற சிக்கந்தருடன் இணைந்து பல வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார். இவரது வீடியோக்களில் சர்ச்சைகளுக்கும் ஆபாசமான வார்த்தைகளுக்கும் பஞ்சமிருக்காது. சூரியா, சிக்காவுடன் ஆபாசமாக வீடியோ எடுத்து போடுவார். இவர்களின் லைவ் வீடியோ இன்னும் மோசமாக இருக்கும். மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசுவார்கள். அவ்வப்போது இவர்களுக்குள் சண்டை வரும், பின்னர் சில நாட்களில் மீண்டும் ஒன்று சேர்ந்து வீடியோ போடுவார்கள். இவர்களை கைது செய்ய வேண்டும் என சென்னை, மதுரை, கோவை உள்பட பல இடங்களில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நிறைய பெண்கள் புகார் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில், ஆபாசமாக வீடியோக்களை பதிவு செய்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் ரவுடி பேபி சூர்யாவையும் சிக்காவையும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மதுரையில் வைத்து கைது செய்துள்ளனர். இந்நிலையில், ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் ஆகியோரின் யூடியூப் சேனல்களை முடக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அறிக்கை விடுத்துள்ள கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம்;- சமூக வலைதளங்களில் சமூகத்தையும், இளைஞர்களையும் சீரழிக்கும் தவறான விஷயங்களை சூர்யாவும், சிக்கந்தர்ஷாவும் யூடியூப்பில் பதிவு செய்து வருவதாகவும், இதுசமூகத்தில் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லக் கூடும் என்பதால் இவர்கள் இருவரும் நடத்தி வரும் surya media மற்றும் singer sikka official ஆகிய யூடியூப் சேனல்களை முடக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு விபசார வழக்கில் சூர்யா கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் MK STALIN டிடிவி தினகரன் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS TAMIL NADU இந்திய அணி AIADMK ரஜினிகாந்த் காங்கிரஸ் PMK தமிழக வெற்றிக் கழகம் கனமழை UDHAYANIDHI STALIN பாமக PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் கோவை CONGRESS INDIAN CRICKET TEAM தமிழகம் EDAPPADI PALANISWAMI கொலை திருமாவளவன் COIMBATORE அன்புமணி ராமதாஸ் அமமுக தமிழ்நாடு கைது KEERTHY SURESH பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM சீமான் தேவர் வன்னியர் OPS சட்டசபை தேர்தல் SURIYA AJITH THIRUMAVALAVAN நெல்லை கொரோனா சூர்யா NELLAI தமிழக சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் TAMIL ACTRESS BIGG BOSS TAMIL வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் CSK தூத்துக்குடி அன்புமணி தென்காசி விடுமுறை மதுரை திருப்பரங்குன்றம் தீபாவளி அஜித் பாலியல் தொல்லை RAJINIKANTH