Tamil News & POLLING

 

நானி நடித்த சூர்யாவின் சனிக்கிழமை – ரூ.52 கோடி வசூலித்து சாதனை!

1 year ago 01 செப்டம்பர் 2024 04:32 PM | views : 150
நடிகர் நானியின் சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படம் உலகளவில் வசூலில் 52 கோடி ரூபாயை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் ‘சரிபோதா சனிவாரம்’. ‘அந்தே சுந்தரானிகி’ திரைப்படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ள படம் தான் ‘சரிபோதா சனிவாரம்’. தமிழில் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை தயாரித்த டிவிவி என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ளது.




இதில் நானி, எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பெண் காவல் அதிகாரியாக, சாருலதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 29 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் தற்போதையது வரையிலான வசூல் விவரங்கள் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் உலகளவில் வசூலில் 52 கோடி ரூபாயை கடந்துள்ளது. சென்னையில் இன்று பெரும்பான்மையான திரையரங்களில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AMMK MK STALIN TAMIL NADU எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN ADMK உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் AIADMK தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM இந்திய அணி ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை சீமான் CONGRESS PMK பாமக தமிழகம் PARLIAMENT ELECTION பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் கைது SEEMAN COIMBATORE KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை EDAPPADI PALANISWAMI அமமுக தீபாவளி கோவை கொலை சட்டசபை தேர்தல் மதுரை TAMIL ACTRESS TAMILAGA VETTRI KAZHAGAM தமிழ்நாடு ஓபிஎஸ் நெல்லை விடுமுறை கள்ளக்காதல் THIRUMAVALAVAN NELLAI திருநெல்வேலி தென்காசி THOOTHUKUDI AJITH திருமாவளவன் திருப்பரங்குன்றம் தேவர் கீர்த்தி சுரேஷ் கொரோனா அஜித் நயினார் நாகேந்திரன் வன்னியர் SENGOTTAIYAN NORTHEAST MONSOON வானிலை ஆய்வு மையம் MADURAI தமிழக அரசு டாப் நியூஸ் ELECTION COMMISSION பாலியல் தொல்லை ASSEMBLY ELECTIONS OPS டிரெண்டிங் 2024 T20 WORLDCUP