Tamil News & POLLING

 

டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா ஜோடியாக கைது!

4 years ago 04 ஜனவரி 2022 04:12 PM | views : 171
ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் மதுரையை சேர்ந்தவ டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவை போலீசார் செவ்வாய்க்கிழமை அதிரடியாக கைது செய்துள்ளனர். அவருடன், அவது நண்பர் சிக்கா என்கிற டிக்கந்தரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

ரவுடி பேபி என்கிற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. இவர் அடிக்கடி ஆபாசமாக பேசி யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வீடீயோ வெளியிட்டு வந்துள்ளார். ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் பெண்கள் குழு ஒன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடத்தி வரும் யூடியூப் சேனல் குறித்து ரவுடி பேபி சூர்யா ஆபமாக தகாத முறையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவருடைய நண்பர் சிக்கா என்கிற சிக்கந்தரையும் கைது செய்துள்ளனர்.

பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவரது சேனலில் வரும் நிகழ்ச்சி தொடர்பாக ரவுடி பேபி சூர்யா தகாத முறையில் ஆபாசமாக பேசியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் சூர்யாவும், அவரது நண்பரான சிக்கா என்கிற சிக்கந்தரும் அந்த பெண்ணை தகாத முறையில் யூ டியூபில் விமர்சித்துள்ளனர்.

ரவுடி பேபி சூர்யா தன்னை அவதூறாகவும் ஆபாசமாக பேசியது குறித்து அந்த பெண்ணும் அவரது கணவரும் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். கோவை மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அவதூறாக பேசியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ஜெயதேவி விசாரித்து வந்தார்.

இந்த நிலையில், மதுரை அருகே ரவுடி பேபி சூர்யா மற்றும் நண்பர் சிக்கந்தரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவருடன் அவரது நண்பர் சிக்கா என்கிற சிக்கந்தரையும் போலிசார் கைது செய்துள்ளனர். ஆபாசமாக பேசி அவதூறு செய்த வழக்கில் டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவும் அவருடைய நண்பர் சிக்காவும் ஜோடியாக கைது செய்யப்பட்டுள்ளது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக TVK BJP அண்ணாமலை தவெக ANNAMALAI AMMK ADMK எடப்பாடி பழனிசாமி AIADMK MK STALIN TTV DHINAKARAN TAMIL NADU டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் PMK கனமழை ரஜினிகாந்த் இந்திய அணி UDHAYANIDHI STALIN சீமான் தமிழகம் INDIAN CRICKET TEAM பாமக பிரதமர் மோடி கொலை CONGRESS அன்புமணி ராமதாஸ் கைது கோவை EDAPPADI PALANISWAMI அமமுக தீபாவளி PARLIAMENT ELECTION வடகிழக்கு பருவமழை COIMBATORE KEERTHY SURESH சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் நெல்லை AJITH NELLAI திருநெல்வேலி கள்ளக்காதல் தமிழ்நாடு தென்காசி SEEMAN விடுமுறை TAMIL ACTRESS THIRUMAVALAVAN திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM மதுரை அஜித் மழை 2024 T20 WORLDCUP திருப்பரங்குன்றம் தமிழக அரசு NORTHEAST MONSOON MADURAI OPS டாப் நியூஸ் டிரெண்டிங் வன்னியர் தேவர் பாலியல் தொல்லை கீர்த்தி சுரேஷ் வானிலை ஆய்வு மையம் ASSEMBLY ELECTIONS THOOTHUKUDI ELECTION COMMISSION