POLLING FLAMES

 

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு! ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் அசத்தல்!

4 years ago 20 மே 2021 03:16 AM | views : 258
கொரோனா வைரஸ்களை அழிக்க இதுவரை எந்த சிகிச்சை முறையும் இல்லாத நிலையில், ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளனர். அவர்கள் கண்டுபிடித்த ஆர்என்ஏ சிகிச்சை முறையில் 99 சதவீதம் கொரோனா வைரஸ்களை அழிக்க முடியும் என கூறி உள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன. இந்த வைரசிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இப்போதுதான் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ்களை அழிக்க எந்த ஒரு சிகிச்சை முறையும் இதுவரை இல்லை. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள கிரிப்பித் பல்கலைக்கழகத்தின் மென்ஸிஸ் சுகாதார நிறுவனமும், அமெரிக்க ஆய்வாளர்கள் குழுவும் இணைந்து கொரோனாவுக்கான புதிய சிகிச்சை முறையை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இவர்கள் மனித செல்களில் கொரோனா வைரஸ் தனது பல மாதிரிகளை உருவாக்குவதை தடுக்க ‘சிறு குறுக்கீடு ஆர்என்ஏ’ (எஸ்ஐஆர்என்ஏ) என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். கொரோனா வைரஸ்கள் உருமாற்றம் பெற்றாலும் அவற்றின் ஆர்என்ஏக்கள் பொதுவானதாக இருக்கும். அந்த ஆர்என்ஏக்கள் தான் வைரஸ்களை நகலெடுக்கின்றன. வைரஸ் ஆர்என்ஏக்களின் சிறு துகள்களில் இருந்து எஸ்ஐஆர்என்ஏ தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றை உடலில் செலுத்தும் போது, வைரஸ்களின் ஆர்என்ஏவுடன் இணைந்து, அவற்றை நகலெடுப்பதை தடுத்து அழிக்கின்றன. எலிகளுக்கு தந்து பரிசோதனை செய்ததில் இந்த சிகிச்சை முறையில் 99% வைரஸ்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும், இது மனிதர்களிடம் சோதித்த பிறகே முழு வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் AIADMK இந்திய அணி ANBUMANI RAMADOSS TAMIL NADU ரஜினிகாந்த் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் கனமழை PMK UDHAYANIDHI STALIN பாமக PARLIAMENT ELECTION CONGRESS INDIAN CRICKET TEAM கோவை முக ஸ்டாலின் COIMBATORE கொலை திருமாவளவன் EDAPPADI PALANISWAMI தமிழகம் அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி KEERTHY SURESH அமமுக வன்னியர் சீமான் தேவர் OPS தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM நெல்லை NELLAI கொரோனா சட்டசபை தேர்தல் தமிழக சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS கைது SURIYA THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL AJITH தீபாவளி சூர்யா ஓபிஎஸ் மதுரை விடுமுறை கள்ளக்காதல் அஜித் தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தென்காசி ELECTION COMMISSION RAJINIKANTH திருப்பரங்குன்றம் CSK அன்புமணி கீர்த்தி சுரேஷ்