அசைவம் சாப்பிடுபவர்களை கருத்தில் கொண்டு இந்த வாரம் சனிக்கிழமையன்று தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகின்ற நிலையில், தமிழ்நாடு அரசு வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடமாடும் பல் மருத்துவ வாகனத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அசைவம் உண்ணும் போது தடுப்பூசி செலுத்திக்கொள்ளக்கூடாது என யாரோ சொல்லியதாகவும் எனவே அவ்வாறு நினைத்துக்கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு இந்த வாரம் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார்.
மேலும், பள்ளிகளுக்கும் இந்த வாகனத்தை அனுப்பி மாணவர்களுக்கு இந்த சேவை செய்ய உள்ளோம். இதன் மூலம் குடிசை பகுதி மக்கள் மட்டும் அல்லாமல் பள்ளி மாணவர்களும் பயன்பட உள்ளனர். மக்கள் பயன்பாட்டின் அடிப்படையில் கூடுதல் நடமாடும் பல் மருத்துவ வாகனம் வாங்கப்படும்.
இன்னும், 30.42 லட்சம் பேர் இரண்டாம் தவனை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S